Advertisment

இவரின்றி இஸ்ரோ இல்லை... விக்ரம் சாராபாய்க்கு மரியாதை செலுத்திய கூகுள் டூடுல்

Vikram Sarabhai 100th birth anniversary: சந்திரயான் 2-ல் பொருத்தப்பட்டிருக்கும் லேண்டருக்கு விக்ரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today google doodle honours ISRO founder Vikram Sarabhai

Today google doodle honours ISRO founder Vikram Sarabhai

Today google doodle honours ISRO founder Vikram Sarabhai : இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை விக்ரம் அம்பாலால் சாராபாய் அவர்களின் 100வது பிறந்த நாள் இன்று. இதனை நினைவு கூறும் விதமாக கூகுளின் ஹோம் பேஜ்ஜில் வரும் டூடுலில் இவரின் சித்திரம் வெளியிட்டு மரியாதை செலுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

Advertisment

Today google doodle honours ISRO founder Vikram Sarabhai

அகமதாபாத்தில் 1919ம் ஆண்டு பிறந்த இவர், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். செல்வ செழிப்பான குடுபத்தில் இவர் பிறந்திருந்த போதிலும், இயற்பியலில் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக ஆராய்ச்சியாளராக தன்னை வடிவமைத்துக் கொண்டார். நவம்பர் 11, 1947ன் அன்று, பிசிக்கல் ரிசர்ச் லேப்ரட்டரி என்ற ஆராய்ச்சி மையத்தை தன்னுடைய 28வது வயதில் அகமதாபாத்தில் துவங்கினார்.

பின்னாளில் இவர் தான், இந்தியாவிற்கு விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்று தேவை என்பதை இந்திய அரசாங்கத்திற்கு விளங்க வைத்தவர். நேசனல் கமிட்டி ஃபார் ஸ்பேஸ் ரிசர்ச் (Indian National Committee for Space Research) என்று அந்நாளில் அழைக்கப்பட்ட இஸ்ரோவை 1962ம் ஆண்டு நிறுவினார் விக்ரம் சாராபாய்.

அவருக்கு அந்நாட்களில் மிகவும் பக்கபலமாக இருந்தார் ஓமி யேகாங்கிர் பாபா. இந்திய அணுக்கருவியலின் தந்தை என அழைக்கப்படும் இவரின் உதவியால் இந்தியாவின் முதல் ராக்கெட் ஸ்டேசன் உருவாக்கப்பட்டு, சோடியம் ஆவி பேலோடுடுடன் கூடிய விமானத்தின் சோதனை முயற்சி வெற்றி வெற்றது.

இந்தியாவின் முதல் செயற்கை கோளான ஆர்யபட்டாவை உருவாக்கியதில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமானது. ஆனால் அவர் இறந்த பின்பு நான்கு வருடங்கள் கழித்தே அந்த செயற்கை கோள் ரஷ்யாவின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது. அவருடைய நினைவால் தான் தற்போது சந்திராயனில் பொருத்தப்பட்டிருக்கும் லேண்டருக்கு விக்ரம் என்று பெயர் இடப்பட்டுள்ளது. கூகுள் டூடுலில் இடம் பெற்றிருக்கும் சாராபாயின் டூடுல் சித்திரத்தை மும்பையை சேர்ந்த பவன் ராஜுக்கார் வரைந்துள்ளார்.

மேலும் படிக்க : சந்திரயான் 2 : புதிய சரித்திரம் படைக்க இருக்கும் 48 நாள் பயணம்!

விருதுகளும் கௌரவங்களும்

இவர் மரணமடைந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் 1972ம் ஆண்டு, இந்திய தபால் துறை இவருடைய புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்தது. அந்த அஞ்சல் தலையில் தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ரோகினி ஏவுகணையின் புகைப்படத்துடன் கூடிய சாராபாயின் படம் இடம் பெற்றிருந்தது.

Today google doodle honours ISRO founder Vikram Sarabhai

நிலவில் அமைந்திருக்கும் Sea of Serenity என்ற பெரும் குழி ஒன்றுக்கு விக்ரம் சாராபாய் அவர்களின் பெயர் வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன்  மற்றும் பத்ம விபூஷன் விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது.

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment