மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பதை கட்டாயமாகி அதை செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்தது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு இதை வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் ரூ.1000 அபராதம் செலுத்தி மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார்- பான் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவித்தது.
இதை செய்ய தவறும் பட்சத்தில் ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின் பான் கார்டு செயலற்றதாகி விடும் எனவும் எச்சரித்தது. இதையடுத்து பலரும் தங்கள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைத்தனர். இந்நிலையில் பயனர்கள் ஆதார்- பான் இணைக்க கால அவசாகம் கோரினர். இதையடுத்து ஆதார்- பான் இணைப்பதற்கான கடைசி தேதி இன்று (ஜுன் 30) வரை நீட்டிக்கப்பட்டது. யாரெனும் ஆதார்- பான் இணைக்க தவறியிருந்தால் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி இன்றே இணைத்து விடுங்கள்.
- வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் e-filing இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும். (https://www.incometax.gov.in/iec/foportal/)
- இதில் இடதுபுறம் உள்ள Quick Links என்ற டேப்பில் “Link Aadhaar” என்பதைக் கொடுக்கவும்.
- இப்போது உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணை பதிவிடவும்.
- அடுத்து Continue to Pay Through e-Pay Tax செலக்ட் செய்யவும்.
- இப்போது மீண்டும் ஆதார், பான் எண் மற்றும் உங்கள் மொபைல் எண் கொடுக்கவும்.
- உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பபட்ட ஓ.டி.பி-யை பதிவிட்டவுடன், payment tiles பக்கம் செல்லும்.
- Income Tax tile என்ற இடத்தில் Proceed என கொடுக்கப்பட்டிருக்கும் அதைக் கொடுக்கவும்.
- அடுத்து AY 2023-24 என்றும் Type of Payment பக்கத்தில் as other Receipts (500) எனவும் கிளிக் செய்யவும்.
- இப்போது Others என்ற இடத்தின் கீழ் ரூ.1000 எனக் கொடுக்கப்பட்டிருக்கும், அதை கொடுத்து உங்கள் வங்கி விவரங்கள் கொடுத்து பணம் செலுத்த வேண்டும்.
பணம் செலுத்தியப் பின்னும் சில வழிமுறைகளை செய்ய வேண்டும். அப்போது தான் உங்கள் ஆதார்- பான் இணைக்கப்படும்.
- பணம் செலுத்தியப் பின் உங்கள் திரையில் pop-up window வரும், அதில் Link Aadhaar கொடுத்து இணைக்கலாம். அவ்வாறு pop-up window வரவில்லை எனில் மீண்டும் முகப்பு பக்கம் வந்து ‘Link Aadhaar’கொடுக்கவும்.
- உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம் என எல்லாம் திரையில் auto-populated ஆகி கொடுக்கப்பட்டிருக்கும்.
- உங்கள் ஆதார்- பான் தகவல்களை சரிபார்த்து. எண்டர் கொடுக்கவும். தவறாக இருக்கும் பட்சத்தில் அதை உரிய ஆவணம் கொண்டு திருத்தவும்.
- அடுத்து மீண்டும் உங்கள் ஆதார் எண் கொடுத்து “link now” பட்டனை கிளிக் செய்யவும்.
- அவ்வளவு தான், உங்கள் ஆதார்- பான் விரைவில் இணைக்கப்படும் என நோட்டிவிக்கேஷன் காண்பிக்கும்.
நீங்கள் ஆதார்- பான் முன்பே இணைத்துவிட்டீங்கள் என்றால் உங்கள் பான்-ஆதார் எண் குறிப்பிட்டவுடன் ஆதார் இணைக்கப்பட்டது என்ற நோட்டிவிக்கேஷன் காண்பிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.