உலக மக்கள்தொகையில் 66 சதவீதத்திற்கும் அதிகமானோர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
DataReportal-ன் சமீபத்திய தரவுகளின்படி உலகளாவிய பயனர்களின் மொத்த எண்ணிக்கை 5.35 பில்லியனாக உள்ளது. கூடுதலாக, 2023-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து புதிதாக 97 மில்லியன் பயனர்கள் இணையம் பயன்படுத்த தொடங்கியதன் காரணமாக இணைய பயனர்கள் எண்ணிக்கை 1.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும், Kepios-ன் பகுப்பாய்வு, ஆக்டிவ் சமூக ஊடக பயனர்களின் எண்ணிக்கை 5 பில்லியனைத் தாண்டியுள்ளது, இது உலக மக்கள்தொகையில் 62.3%-ஐ குறிக்கிறது.
DataReportal மற்றும் Kepios பகுப்பாய்வுகளின்படி, இந்தியாவில் சுமார் 821 மில்லியன் இணைய பயனர்கள் மற்றும் 462 மில்லியன் ஆக்டிவ் சமூக ஊடக கணக்குகள் 19 மில்லியன் இணைய பயனர்கள் அல்லது 2.6% அதிகரிப்பைக் குறிக்கின்றன.
எனவே, பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல, இன்றைய உலகில் தகவல்தொடர்புக்கான அடிப்படை வழியாக மாறியுள்ளது என்பது தெளிவாகிறது.
இப்போதும், ஆச்சரியப்படுவதற்கில்லை உலகளவில் கிட்டத்தட்ட 3.1 பில்லியன் பயனர்களுடன் சமூக ஊடக தளங்களில் மிகவும் பிரபலமான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில் பேஸ்புக் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சர் ஆகியவை 10 பிரபலமான சமூக ஊடக தளங்களில் இடம் பெற்றுள்ளது.
1. பேஸ்புக் - ஆக்டிவ் பயனர்கள் 3,070
2. யூடியூப் - 2,500
3 வாட்ஸ்அப் - 2,000
4. இன்ஸ்டாகிராம் - 2,000
5. டிக்டாக் - 1,600
6. வீசாட் (Wechat) - 1,360
7. பேஸ்புக் மெசஞ்சர் - 977
8. டெலிகிராம் - 900
9. ஸ்னாப்சாட் - 800
10. Douyin - 755
இருப்பினும், குறிப்பாக ரஷ்யா, உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் யூனியனின் குடியரசுகளில் பிரபலம் பெற்ற டெலிகிராம், 950 மில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் பயனர்களுடன், உலகளவில் 8-வது இடத்தில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“