வீட்டையே தியேட்டராக்கலாம்.. பட்ஜெட்ல சாம்சங், சோனி, எல்.ஜி-யின் 65-இன்ச் 4K டிவி மாடல்கள்!

இந்தியச் சந்தையில் 65-இன்ச் போன்ற பெரிய திரை ஸ்மார்ட் டிவிகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. அமேசான் தளம், வங்கித் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுடன் பல்வேறு 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விற்பனை செய்கிறது.

இந்தியச் சந்தையில் 65-இன்ச் போன்ற பெரிய திரை ஸ்மார்ட் டிவிகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. அமேசான் தளம், வங்கித் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுடன் பல்வேறு 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விற்பனை செய்கிறது.

author-image
Meenakshi Sundaram S
New Update
65 inch smart tv

வீட்டையே தியேட்டராக்கலாம்... பட்ஜெட்ல சாம்சங், சோனி, எல்.ஜி-யின் 65-இன்ச் 4K டிவி மாடல்கள்!

இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் தற்போது பெரிய ஸ்கிரீன் டிவிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் 65 இன்ச் மாடல்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், அவற்றை வாங்கத் திட்டமிடுவோருக்கு அமேசான் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் கவர்ச்சிகரமான ஆஃபர்கள் மற்றும் டிஸ்கவுண்ட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisment

திரைப்படங்கள், வெப் சீரிஸ், கேமிங் அல்லது அலுவலகப் பயன்பாடுகள் என எதற்கும், ஒரு பெரிய திரை மிகத் தெளிவான மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவத்தை வழங்கும். அமேசானில் தற்போது கிடைக்கும் வங்கித் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுடன் கிடைக்கும் சிறந்த 5 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியல் இங்கே.

1. சாம்சங் 65 இன்ச் 4K அல்ட்ரா HD ஸ்மார்ட் டிவி

சாம்சங் நிறுவனத்தின் இந்த 65-இன்ச் 4K அல்ட்ரா HD ஸ்மார்ட் டிவி, அமேசானில் தற்போது ரூ. 61,990 விலையில் கிடைக்கிறது. ஹெச்.டி.எஃப் வங்கி கார்டு மூலம் பணம் செலுத்தும்போது, ரூ.1,500 வரை உடனடி தள்ளுபடி பெறலாம், இதனால் இதன் இறுதி விலை ரூ.60,490 ஆக குறைகிறது. மேலும், உங்க பழைய டிவியை எக்ஸ்சேஞ்ச் செய்தால், ரூ.9,050 வரை கூடுதல் தள்ளுபடி பெற முடியும்.

2. ஹைசென்ஸ் 65 இன்ச் E6N சீரிஸ் ஸ்மார்ட் டிவி

ஹைசென்ஸ் (Hisense) நிறுவனத்தின் 65-இன்ச் E6N சீரிஸ் ஸ்மார்ட் டிவி அமேசானில் ரூ.46,999 விலையில் விற்கப்படுகிறது. ஹெச்டிஎஃப் வங்கி கார்டு ஆஃபர் மூலம் ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம், இதன் இறுதி விலை ரூ. 45,499 ஆகிறது. இந்த டிவி 4K அல்ட்ரா HD (3840×2160 பிக்சல்கள்) ரெசல்யூஷன் மற்றும் 60 Hz புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh Rate) வருகிறது.

Advertisment
Advertisements

3. VW 65 இன்ச் ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் டிவி

VW 65-இன்ச் ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் டிவி, அமேசானில் ரூ. 41,999 என்ற கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கிறது. ஹெச்டிஎஃப் கார்டுகளுக்கான வங்கிச் சலுகையின் கீழ் ரூ. 1,500 தள்ளுபடியும் இதற்குக் கிடைக்கும். இது 65-இன்ச் QLED டிஸ்ப்ளே, 4K ரெசல்யூஷன் மற்றும் 60 Hz புதுப்பிப்பு வீதம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

4. எல்ஜி 65 இன்ச் UR75 சீரிஸ் ஸ்மார்ட் டிவி

எல்ஜி (LG) UR75 சீரிஸ் 65-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை அமேசானில் ரூ. 63,990 ஆக உள்ளது. வங்கி சலுகை மூலம் ரூ. 1,500 தள்ளுபடியைப் பெறலாம். தள்ளுபடிக்குப் பிறகு, இதன் விலை ரூ. 62,490 ஆகக் குறையும். இது 4K தெளிவுத்திறன் (3840×2160 பிக்சல்கள்) மற்றும் 60 Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய பிரகாசமான LED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

5. சோனி 65 இன்ச் பிராவியா 2 4K ஸ்மார்ட் டிவி

சோனி பிராவியா 2 சீரிஸ் 65-இன்ச் 4K ஸ்மார்ட் டிவியின் விலை அமேசானில் ரூ. 72,490 ஆகும். இதற்கும் HDFC வங்கி அட்டை மூலம் ரூ. 1,500 தள்ளுபடி கிடைப்பதால், இதன் இறுதி விலை ரூ. 70,990 ஆகக் குறையும். இது 4K அல்ட்ரா HD (3840×2160 பிக்சல்கள்) தெளிவுத்திறன் மற்றும் 60 Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய உயர்தர LED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

இந்த அனைத்து தொலைக்காட்சிகளும் ஸ்மார்ட் இணைப்பு, ஸ்ட்ரீமிங் செயலிகளுக்கான ஆதரவு மற்றும் சக்திவாய்ந்த ஒலி அமைப்புகள் போன்ற நவீன அம்சங்களைக் கொண்டுள்ளன. இவை வீட்டிலேயே ஒரு முழுமையான சினிமா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: