ரூ. 10,000-க்குள் நல்ல கேமரா ஸ்மார்ட்போன் வாங்கனுமா ? இந்த லிஸ்ட்ட செக் பண்ணுங்க!

நல்ல செல்ஃபி மற்றும் மிகவும் துல்லியமான தகவல்கள் நிறைந்த நல்ல புகைப்படங்கள் எடுக்கவும் இந்த ஸ்மார்ட்போன்கள் உதவுகின்றது.

Top 5 camera smartphones under Rs 10,000 : சிறந்த கேமரா ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா என்றால் இந்த லிஸ்ட்டை கொஞ்சம் பாருங்கள்.

Top 5 camera smartphones under Rs 10,000

ரியல்மீ 3

விலை : ரூ.8,999

இரட்டை பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது (13 எம்.பி + 2 எம்.பி). அவுட்டோர் போட்டோ ஷூட் எடுப்பதற்காகவும், லோ – லைட் ஒளியில் போட்டோ எடுப்பதற்காகவும் இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்தலாம். செல்ஃபி கேமரா 13 எம்.பி செயல் திறன் கொண்டதாகும்.

Redmi Note 7

விலை : ரூ. 9,999

ரெட்மீ நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் ரெட்மீ நோட் 7 ஸ்மார்ட்போன் வெளியானது. 48ஜிபி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. 12 எம்.பி. ப்ரைமரி கேமரா மற்றும் 2 எம்.பி. செகண்ட்ரி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. பேஸ் டிடெக்சன் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் எச்.டி.ஆர் கொண்டுள்ளது. இதன் செல்ஃபி கேமரா செயல்திறன் 13எம்.பி. கொண்டுள்ளது.

Nokia 5.1 Plus

ரூ. 9,999

நல்ல டிசைன் மற்றும் பில்ட் கொண்டுள்ள போன் இதுவாகும். 13 எம்.பி. ப்ரைமரி கேமராவுடன் 5 எம்.பி செக்ண்டரி பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகத் துல்லியமானதாகவும், வெளிச்சமான இடங்களில் படம் எடுப்பதற்கு சிறந்ததாகவும் உள்ளது.

இந்த பட்டியலில் இணைகிறது மோட்டோ நிறுவனத்தின் ஜி6 போனும், எல்.ஜியின் க்யூ 6 போனும். இந்த போன்களின் விலை முறையே ரூ. 9538 மற்றும் 8,990 ஆகும். நல்ல செல்ஃபி மற்றும் மிகவும் துல்லியமான தகவல்கள் நிறைந்த நல்ல புகைப்படங்கள் எடுக்கவும் இந்த ஸ்மார்ட்போன்கள் உதவுகின்றது.

மேலும் படிக்க : டி.எஸ்.எல்.ஆர் கேமராவிற்கே சவால் விடும் ஹூவாயின் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன்…

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close