இந்தியாவில் மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்களின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் இதன் வருவாய் ₹1.1 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மியூசிக் ஸ்ட்ரீமிங்கின் வளர்ச்சி ஒருபுறம் இருக்க, ப்ரீமியம் ப்ளூடூத் ஹெட்போன்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த ஹெட்போன்கள், ஸ்டைல் ஸ்டேட்மென்டாகவும் மாறிவிட்டன. ஜிம்மில், நீண்ட விமானப் பயணங்களில் என எங்கும் இதை பயன்படுத்தலாம். ஃபேஷன் & தொழில்நுட்பத்தின் கலவையில், ப்ரீமியம் ஹெட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் 5 சிறந்த மாடல்கள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
1. Dyson OnTrac
2024-ல் அறிமுகமான சிறந்த ப்ரீமியம் ஹெட்போன்களில் இதுவும் ஒன்று. தனித்துவமான வடிவமைப்பு, அலுமினியத்தால் ஆன பாடி, பல்வேறு நிறங்களில் கிடைக்கும் குஷன் மற்றும் கேப்கள் (accessories) என தனிப்பயனாக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் CNC காப்பர் நிறம் தனித்து நிற்கும். இது வெறும் ஸ்டைல் மட்டுமல்ல, 40mm நியோடைமியம் ஸ்பீக்கர் டிரைவர்கள் மூலம் சிறந்த சவுண்ட் அனுபவத்தையும், நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்தையும் தருகிறது. MyDyson App மூலம், நீங்கள் எவ்வளவு இரைச்சலான சூழலில் இருக்கிறீர்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மேலும், 55 மணிநேர பேட்டரி ஆயுள் இதன் இன்னொரு சிறப்பம்சம். (விலை: ரூ.26,900)
2. The Beats Studio Pro – Kim Special Edition
பிரபலமான Beats Audio நிறுவனமும், கிம் கர்தாஷியனும் இணைந்து உருவாக்கிய ஹெட்போன் இது. கிம் கர்தாஷியனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன் (Moon) நிறம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. இந்த ஹெட்போனுடன் அதே நிறத்தில் கேரிங் கேஸ் மற்றும் கஸ்டம் கேபிள்கள் வருகின்றன. ஆப்பிள் சாதனங்களுடன் இதனை எளிதாக இணைக்க முடியும். இது ஆப்பிள் ஏர்பாட்ஸைப் போன்ற ஒரு தடையற்ற அனுபவத்தை வழங்குகிறது. ஆப்பிள் சாதனங்களுடன் இணைக்கும் போது ஸ்பேஷியல் ஆடியோ (Spatial Audio) அம்சத்தையும் பயன்படுத்தலாம். 40mm டிரைவர்கள் சிறந்த சவுண்ட் ஸ்டேஜை வழங்குகின்றன. 40 மணிநேர பேட்டரி ஆயுள் இதன் சிறப்பம்சங்களில் ஒன்று. (விலை: ரூ.35,000)
3. Sennheiser Momentum Wireless 4 Denim
சென்ஹைசரின் இந்த ஆல்-ப்ளூ மாடல், உங்களுக்குப் பிடித்த ஜீன்ஸ் போலவே எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம் என சென்ஹைசர் கூறுகிறது. டெனிம் நிறத்திலான இந்த மாடல், ஃபேப்ரிக் கோட்டிங்குடன் தனித்துவமான தோற்றத்தைக் கொடுக்கிறது. நாள் முழுவதும் பயன்படுத்த ஏற்ற வகையில், குறைந்த எடை, மென்மையான ஹெட் பேண்ட் மற்றும் குஷன் கொண்ட இயர்பேடுகளுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 42mm டிரான்ஸ்யூசர் கொண்ட இதன் அக்யூஸ்டிக் சிஸ்டம், தெளிவான மற்றும் துடிப்பான சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது. அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் ட்ரான்ஸ்பரன்சி மோட் இடையே எளிதாக மாறலாம். Sennheiser-ன் Smart Control App மூலம் தனிப்பயனாக்கப்பட்ட இசை அனுபவத்தைப் பெறலாம். (விலை: ரூ.24,990)
4. Crusher ANC 2
ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் க்ரஷர் ஹெட்போன்கள், அதன் அதிகப்படியான பாஸ் மற்றும் சிறப்பான நாய்ஸ் கேன்சலேஷனுக்காகப் பெயர் பெற்றவை. இது Plasma போன்ற வித்தியாசமான நிறங்களில் கிடைக்கிறது. க்ரஷர் ANC 2-வில் உள்ள 4 மைக்ரோபோன்கள் வெளிப்புற இரைச்சல் முழுமையாகக் குறைக்கும். இதில் மியூட், ஹியரிங் எனப் பல நாய்ஸ் கேன்சலேஷன் நிலைகளைத் தேர்ந்தெடுக்கலாம். பாஸ் பிரியர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இரண்டு 40mm ஆடியோ டிரைவர்கள் மற்றும் டூயல் பாஸ் டிரைவர்கள், ஒரு லைவ் ஷோவைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. ANC வசதியுடன் 50 மணிநேரம் வரை பேட்டரி ஆயுள் கிடைக்கும். 10 நிமிட சார்ஜில் 4 மணிநேரம் பயன்படுத்தலாம். (விலை: ரூ.19,999)
5. Marshall Major V
ரூ.15,000-க்குள் கிடைக்கும் ஸ்டைலான ஹெட்போன்களில் இதுவும் ஒன்று. இது Marshall-ன் வழக்கமான சவுண்ட் அனுபவத்துடன், கஸ்டம் ட்யூன் செய்யப்பட்ட டைனமிக் டிரைவர்களைக் கொண்டுள்ளது. ஸ்டைலாகவும் அதே சமயம் உறுதியாகவும் இருக்கிறது. எளிதாக மடித்து வைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி ஆயுள் 100 மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும். வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதன் M-பட்டனைப் பயன்படுத்தி ஸ்பாட்டிஃபை, EQ செட்டிங்ஸ் அல்லது வாய்ஸ் அசிஸ்டென்ட் போன்ற அம்சங்களை அணுகலாம். (விலை: ரூ.14,999)