நத்திங் முதல் சாம்சங் வரை... ஜூலையில் களமிறங்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

ஜூலை மாதம் ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு ஒரு அற்புதமான மாதமாக இருக்கும்! பல முக்கிய நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் ஜூலையில் எதிர்பார்க்கப்படும் சில முக்கிய ஸ்மார்ட்போன்கள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

ஜூலை மாதம் ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு ஒரு அற்புதமான மாதமாக இருக்கும்! பல முக்கிய நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் ஜூலையில் எதிர்பார்க்கப்படும் சில முக்கிய ஸ்மார்ட்போன்கள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
5g smartphones

ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஜூலை மாதம் அற்புதமான மாதமாக அமையவுள்ளது. நத்திங் (Nothing) முதல் விவோ (Vivo) வரை பல முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பட்ஜெட் விலை மற்றும் பிரீமியம் ரக போன்களை அறிமுகப்படுத்த உள்ளன. சாம்சங்கின் வரவிருக்கும் கேலக்ஸி இசட் சீரிஸ் (Samsung Galaxy Z series) முதல் அதிகம் எதிர்பார்க்கப்படும் நத்திங் போன் 3 (Nothing Phone 3) வரை, அடுத்த மாதம் ஜூலையில் வெளிவரவிருக்கும் சில சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

Advertisment

1. Motorola Moto G96

மோட்டோரோலா ஜி96 (Motorola Moto G96) ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மோட்டோரோலாவின் "ஜி" சீரிஸில் வரவிருக்கும் ஒரு புதிய மாடல் ஆகும். 6.67 இன்ச் pOLED வளைந்த டிஸ்ப்ளே, 144Hz புதுப்பிப்பு வீதம் (refresh rate) மற்றும் 10-பிட் கலர் ஆதரவுடன். வாட்டர் டச் 2.0 தொழில்நுட்பமும் இடம்பெறலாம்.

The Motorola G96 might be powered by the Snapdragon 7s Gen 2.

Advertisment
Advertisements

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட். 12GB ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ். பின்புறம் 50MP சோனி லிட்டியா LYT-700C முதன்மை சென்சார் OIS உடன் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா முன்புறம் 32MP செல்ஃபி கேமரா இருக்கும். 5500mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Hello UI. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ், IP68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு, 5G இணைப்பு. Cattleya Orchid, Dresden Blue, Greener Pastures, மற்றும் Ashleigh Blue ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். இந்தியாவில் சுமார் ரூ.22,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோரோலா ஜி96 5ஜி ஜூலை 10, 2025 அன்று (எதிர்பார்க்கப்படுகிறது) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே Flipkart-ல் இதற்கான மைக்ரோசைட் வெளியிடப்பட்டுள்ளது.

2. Nothing Phone (3)

நத்திங் (Nothing) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) கார்ல் பெய் (Carl Pei), தங்களது முதல் முதன்மை ரக ஸ்மார்ட்போனான நத்திங் போன் (3) ஜூலை 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பிரீமியம் ரகபோனில், இந்நிறுவனம் தனது தனித் துவமான கிளிஃப் இன்டர்ஃபேஸை (Glyph interface) கைவிட்டு, பின்புறத்தில் டாட் மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே (dot matrix display) அம்சத்துடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The Nothing Phone 3 will be powered by the newly launched Snapdragon 8s Gen 4.

நத்திங் போன் (3) ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட்டிற்குப் பதிலாக, ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதே சிப்செட் ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ எஃப்7 (Poco F7) போன்ற போன்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6.77 இன்ச் 120Hz AMOLED திரையுடன் வரும் என்று கூறப்படுகிறது. மேலும், 12GB ரேம் மற்றும் 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வரை வழங்கும். பின்புறத்தில், 50MP முதன்மை லென்ஸ் கொண்ட 3 கேமரா அமைப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற லென்ஸ்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. நத்திங் நிறுவனம், போன் (3) பிரீமியம் பொருட்களால் தயாரிக்கப்படும் என்றும், "மென்பொருள் அம்சங்கள் உண்மையாகவே அடுத்த கட்டத்திற்கு உயர்த்தப்படும்" என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. விலையைப் பொறுத்தவரை, நத்திங் போன் (3) சுமார் 800 பவுண்டுகள் (£800) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 90,000 ஆகும்.

3. Samsung Galaxy Z Fold 7 and Galaxy Z Flip 7

சாம்சங் (Samsung) நிறுவனம் சமீபத்தில் ஜூலை 9 ஆம் தேதி நியூயார்க்கின் புரூக்ளினில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளது. இந்த நிகழ்வில் தென் கொரிய நிறுவனமான சாம்சங், கேலக்ஸி Z Fold 7 (Galaxy Z Fold 7) மற்றும் கேலக்ஸி Z Flip 7 (Galaxy Z Flip 7) ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The Galaxy Z Fold 7 is rumoured to get a 200MP primary camera.

நிறுவனத்தின் வரவிருக்கும் புத்தகம் போன்ற மடிக்கக்கூடிய ஃபோனான கேலக்ஸி Z Fold 7, "அல்ட்ரா" அனுபவத்தை வழங்கும். மேலும், இந்த ஃபோன் 8.2 இன்ச் உள் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்று வதந்திகள் பரவி வருகின்றன. உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது சாம்சங்கின் இதுவரை இல்லாத மிகப்பெரிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இருக்கும். Snapdragon 8 Elite for Galaxy சிப்செட் எதிர்பார்க்கலாம். சாம்சங் தனது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Exynos 2500 சிப்செட்டைப் பயன்படுத்தலாம் என்றும் சமீபத்திய வதந்திகள் தெரிவிக்கின்றன. பின்புறத்தில், 200MP முதன்மை கேமராவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் அல்ட்ரா-வைட் சென்சார்கள் கடந்த ஆண்டைப் போலவே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி Z Flip 7 ஐப் பொறுத்தவரை, சாம்சங் மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா (Motorola Razr 60 Ultra) போனைப் போல கிட்டத்தட்ட பெசல் இல்லாத கவர் ஸ்கிரீனைத் தேர்வுசெய்யலாம். மேலும், 6.8 இன்ச் திரையைக் கொண்டிருக்கும். 50MP முதன்மை கேமராவுடன் கூடுதலாக 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் இருக்கும் என்றும், ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஒன் UI 8 (One UI 8) உடன் வரும் என்றும், 4,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

4. Oppo Reno 14

ஒப்போ (Oppo) நிறுவனம் தனது ரெனோ 14 (Reno 14) சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஜூலை 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசான் (Amazon) மற்றும் ஃபிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் கிடைக்கும். சீன மாடல்களில் இருந்து வேறுபட்டு, ரெனோ 14 மற்றும் ரெனோ 14 ப்ரோ (Reno 14 Pro) ஆகியவற்றின் இந்திய பதிப்புகள், பெரும்பாலும் மீடியாடெக் டைமென்சிட்டி 8450 (MediaTek Dimensity 8450) சிப்செட் மூலம் இயக்கப்படும். மேலும், இவை பெரிய சிலிக்கான் கார்பன் பேட்டரிகளுடன் வரும். ரெனோ 14 ப்ரோ ஒரு 6.59 இன்ச் AMOLED திரையைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் ப்ரோ மாடல் 6.83 இன்ச் டிஸ்ப்ளேவைப் பெறலாம்.

The Oppo Reno 14 will come with ColorOS 15 based on Android 15.

ரெனோ 14 ஸ்மார்ட்போனில் OIS (Optical Image Stabilization) கொண்ட 50MP சோனி IMX882 சென்சார், 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 50MP டெலிஃபோட்டோ ஷூட்டர் இருக்கும் என்று தெரிவிக்கின்றன. ரெனோ 14 ப்ரோ ஒரு மூன்று 50MP கேமரா அமைப்பை கொண்டிருக்கும். இது சீன பதிப்பைப் போலவே இருந்தால், ரெனோ 14 இல் 6,000mAh பேட்டரியையும், ரெனோ 14 ப்ரோவில் சற்று பெரிய 6,200mAh பேட்டரியையும் எதிர்பார்க்கலாம்

5. Vivo X200 FE

விவோ நிறுவனம் சமீபத்தில் தனது புதிய கச்சிதமான ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான X200 FE ஐ தைவானில் அறிமுகப்படுத்தியது. தற்போது, ஒன்பிளஸ் நிறுவனத்தின் வழியைப் பின்பற்றி, விவோ தனது புதிய கச்சிதமான ஃபோன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. விவோ சரியான வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை என்றாலும், ஜூலை 14 முதல் 19 ஆம் தேதிக்குள் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 9300+ சிப்செட் மூலம் இயங்கும் என்றும், IP68 மற்றும் IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வரவிருக்கும் கச்சிதமான ஃபிளாக்ஷிப் ஃபோன் 6,500mAh பெரிய பேட்டரியுடன் 90W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் வரும்.

Rumour has it that the Vivo X200 FE will come with Origin OS instead of Funtouch OS.

பின்புறத்தில், Zeiss-டியூன் செய்யப்பட்ட 3 கேமரா அமைப்பு இருக்கும். இதில் 50MP முதன்மை கேமரா, 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் சென்சார் ஆகியவை அடங்கும். இருப்பினும், மிகப்பெரிய மாற்றம் மென்பொருள் பிரிவில் இருக்கலாம். விவோ இறுதியாக ஃபன்டச் OS (FunTouch OS) ஐ கைவிட்டு, அம்சங்கள் நிறைந்த, அழகியல் ரீதியாக கவர்ச்சிகரமான ஆரிஜின் OS (OriginOS) ஐப் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Technology 5G Smartphones

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: