டாப் 5 ஸ்மார்ட் போன்கள் இவைதான்… பட்ஜெட் விலையில் வாங்கலாம்!

இந்த நிதியாண்டின் முதலாம் காலாண்டில், இந்தியாவில் விற்றுத் தீர்ந்த முதல் 5 ஸ்மார்ட் போன்கள்

By: July 7, 2018, 1:46:48 PM

சியோமி ரெட்மி 5A மற்றும் சாம்சங் கேலக்ஸி J7 Nxt இரண்டு போன்களும் இந்த வருட நிதியாண்டின் முதல் காலாண்டில் அதிகமாக விற்பனையான ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

சியோமி ரெட்மி 5A (Xiaomi Redmi 5A)

கவுண்ட்டர்பாய்ண்ட் ஆராய்ச்சியின் மூலம் சியோமி ரெட்மி 5A அதிகளவு விற்பனையாகி சாதனை புரிந்துள்ளது. இந்திய சந்தையில் 12% முதல் காலாண்டில் இந்த போன்களே விற்பனையாகியுள்ளன. பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த போன் இருக்கிறது. இந்த தேசத்தின் போன் என்ற டேக்லைன்னுடன் வெளியான இந்த போனின் வடிவமைப்பு மற்றும் செயல்திறன் என இரண்டுமே அபாரம். இரண்டு வேறுபட்ட சிறப்பம்சங்களுடன் கிடைக்கும் இப்போனின் 2ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ. 5,999 மற்றும் 3ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ. 6,999 மட்டுமே.

top 5 smartphones in India top 5 smartphones in India

சாம்சங் கேலக்ஸி J7 Nxt (Samsung Galaxy J7 )

சாம்சங் கேலக்ஸி J7 Nxt இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது. 7% இடத்தினைப் பிடித்துள்ள இந்த போனின் விலை ரூ. 9490 (2 ஜிபி வேரியண்ட்) சூப்பர் ஏஎம்ஓஎல்இடி ( Super AMOLED) திரையுடன் வெளிவந்திருக்கும் இந்த போன் அனைத்து விதமான செயலிகளையும் வெற்றிகரமாக இயக்குகிறது. பேட்டரி பேக் அப் 3,000mAh ஆகும்.

சாம்சங் கேலக்ஸி J7 2017 (Samsung Galaxy J2 2017)

இதனைத் தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி J7 2017 6% சந்தைப் பங்குகளுடன் மூன்றாவது இடத்தினைப் பிடித்துள்ளது. 4.7 இன்ச், குவாட்டர் எச்.டி சூப்பர் ஏஎம்ஓஎல்இடி ( Super AMOLED) திரிஅயுடன் வருகின்றது இந்த போன். 1.3GHz குவாட் கோர் எக்ஸினாஸ் ப்ரோசஸ்ஸர் மூலமாக இயங்கும் இந்த போனின் சிறப்பம்சங்கள் இவை தான். 1GB ரேம், 8GB இண்டெர்னல் ஸ்டோரேஜ், 5MP ரியர் கேமரா மற்றும் 2,000mAh பேட்டரி. அதிவேக செயல்பாடு இதில் இல்லை என்றாலும் இதன் விலைக்காக இப்போன் வாங்கப்படுகிறது. விலை ரூ. 6,190 ஆகும்.

சியோமி ரெட்மி நோட் 5 (Xiaomi’s Redmi Note 5)

சியோமி ரெட்மி நோட் 5, நான்காவது இடத்தில் 4% மார்க்கெட் சேருடன் இருக்கிறது. 18:9 திரையுடன் கூடிய இந்த போனின் செயல் மற்றும் வடிவமைப்பு என இரண்டுமே சிறப்பு. இரண்டு வேரியண்ட்டுகளுடன் சந்தையில் கிடைக்கிறது. 3GB RAM மாடல் ரூ. 9,999க்கும் 4GB RAM மாடல் ரூ. 11, 999க்கும் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி J2 2016 (Samsung Galaxy J2 2016)

சாம்சங் கேலக்ஸி J2 2016 மாடலுக்கு இன்றும் இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. 3% மார்க்கெட் ஷேருடன் இருக்கும் இந்த போனின் விலை ரூ. 7,777 மட்டுமே. இதனுடைய சிறப்பம்சங்கள் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லையென்றாலும், அதனுடைய ஸ்மார்ட் க்ளோவிற்காகவே இன்னும் வாங்கப்படுகிறது.

இந்த ஆராய்ச்சி நிறுவனம் “18:9 என்ற திரையுடன் வரும் அத்தனை போன்களுக்கும் இங்கு நல்ல வரவேற்பு இருக்கும்” என்று கூறியுள்ளது. அதே போல் இரண்டு பின்பக்க கேமராக்களை கொண்டுள்ள போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Top 5 smartphones india yes xiaomi redmi 5a no surprise names might

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X