/indian-express-tamil/media/media_files/2025/09/04/20k-phones-2025-09-04-13-33-57.jpg)
ஒன்பிளஸ் முதல் விவோ, சாம்சங் வரை... ரூ.20,000 பட்ஜெட்டில் பிரீமியம் ஃபீல் தரும் 5 ஸ்மார்ட்போன்கள்!
இந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில், பட்ஜெட் போன்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அதிலும், ரூ.20,000-க்குள் ஸ்மார்ட்ஃபோன் வாங்க நினைப்பவர்களுக்கு, பலவிதமான தேர்வுகள் உள்ளன. புதிய ஸ்மார்ட்ஃபோன் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த லிஸ்ட் உங்களுக்கு நிச்சயமாக உதவும். மோட்டோரோலா முதல் சாம்சங் வரை, பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
மோட்டோ G85 5G: கம்மியான பட்ஜெட்டில் செம லுக்!
ரூ.17,999 விலையில், மோட்டோ G85 5G பிரீமியம் போன்போல காட்சியளிக்கிறது. இதன் 3D கர்வ்டு pOLED டிஸ்ப்ளே பார்ப்பவர்களைக் கவரும். 120Hz புதுப்பிப்பு வீதமும், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பும் இதன் கூடுதல் பலம். ஸ்னாப்டிராகன் 6s ஜென் 3 செயலி, 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் என அசத்தலான அம்சங்கள் இதில் உள்ளன. புகைப்படப் பிரியர்களுக்கு, 50MP சோனி LYTIA 600 சென்சார் மற்றும் OIS (Optical Image Stabilisation) அம்சம் பெரிய உதவி. மேலும், டால்பி அட்மாஸ் ஆடியோ மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஆகியவையும் இதன் சிறப்பம்சங்கள்.
ஒன்பிளஸ் நோர்ட் CE4 லைட் 5G: ஃபாஸ்ட் சார்ஜிங், ஃபுல் டே பேட்டரி!
போனை சார்ஜ் போட மறந்துவிடுபவர்களுக்கு, இந்த ஒன்பிளஸ் போன் ஒரு வரப்பிரசாதம். வெறும் ரூ.17,070க்கு, 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இதன் 5,500mAh பேட்டரி ஒரு நாள் முழுவதும் தாங்கும். ஸ்னாப்டிராகன் 695 5G சிப் உடன், 120Hz கொண்ட 6.72-இன்ச் டிஸ்ப்ளேவும் இதில் உள்ளது. 50MP பிரதான கேமரா, மேக்ரோ மற்றும் டெப்த் சென்சார்கள் என கேமரா அம்சங்களும் நிறைந்துள்ளன.
ஒப்போ K13 5G: ஒரு நாள் முழுக்க தீராத பேட்டரி!
ரூ.19,999 விலையில் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும் போன் வேண்டும் என்றால், ஒப்போ K13 5G-ஐ தேர்ந்தெடுக்கலாம். இதில் உள்ள 7000mAh பேட்டரி, ஒருநாள் பயன்பாட்டை எளிதாக சமாளிக்கும். மேலும், 80W சூப்பர்வூக் சார்ஜர் இருப்பதால், வேகமாக சார்ஜ் ஏறிவிடும். ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 செயலி, 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் என அம்சங்கள் நிறைந்த இந்த போனில், 6.67-இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. பின்புறத்தில் 50MP + 2MP கேமராவும், முன்புறத்தில் 16MP செல்ஃபி கேமராவும் உள்ளது.
விவோ T4R 5G: வளைந்த டிஸ்ப்ளே அழகு!
வளைந்த டிஸ்ப்ளே (curved display) பிடிக்கும் என்றால், விவோ T4R 5G சரியான சாய்ஸ். ரூ.19,499 விலையில், இந்த போன் 5,700mAh பேட்டரி மற்றும் 6.77-இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. டைமென்சிட்டி 7400 5G செயலி மற்றும் 8GB ரேம், 128GB ஸ்டோரேஜ் ஆகியவை அன்றாட பணிகளுக்கு உதவுகின்றன. 50MP+2MP பின்புற கேமரா, 32MP முன்புற கேமரா மூலம் துல்லியமான செல்ஃபி மற்றும் வீடியோ கால்களை அனுபவிக்கலாம்.
சாம்சங் கேலக்ஸி F36 5G: பட்ஜெட்டில் சாம்சங் பிரீமியம் ஃபீல்!
லட்சக்கணக்கில் செலவு செய்யாமல் ஒரு சாம்சங் போன் வாங்க ஆசைப்படுபவர்களுக்கு, கேலக்ஸி F36 5G சிறந்த வழி. ரூ.17,499-க்கு வரும் இந்த போனில் 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ் (2TB வரை விரிவாக்கலாம்) மற்றும் 5000mAh பேட்டரி உள்ளன. சாம்சங் எக்ஸினோஸ் 1380 செயலி இதன் 6.7-இன்ச் டிஸ்ப்ளேவை இயக்குகிறது. பின்புறத்தில் 50MP+8MP+2MP கொண்ட 3 கேமராக்களும், முன்புறத்தில் 13MP கேமராவும் உள்ளது.
இந்த 5 போன்களும் பட்ஜெட்டுக்குள் சிறந்த அம்சங்களை வழங்குகின்றன. பேட்டரி, கேமரா, டிசைன் என எது முக்கியம் என நினைக்கிறீர்களோ, அதற்கேற்ப இந்த பிராண்டுகளில் இருந்து தேர்வு செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.