சீலிங் ஃபேன் மெதுவா சுத்துதா? இந்த 6 விஷயங்களை கவனிங்க!
நடுத்தர மற்றும் ஏழை மக்களை வெப்பத்திலிருந்து காப்பது மின்விசிறிகள் என்றால் மிகையல்ல. சிறிய குறைபாடு கூட மின்விசிறியின் வேகத்தை குறைக்கலாம். எனவே, மின்விசிறியின் வேகத்தை அதிகரிக்க இந்த 6 விஷயங்களைப் பின்பற்றுங்கள்.
நடுத்தர மற்றும் ஏழை மக்களை வெப்பத்திலிருந்து காப்பது மின்விசிறிகள் என்றால் மிகையல்ல. சிறிய குறைபாடு கூட மின்விசிறியின் வேகத்தை குறைக்கலாம். எனவே, மின்விசிறியின் வேகத்தை அதிகரிக்க இந்த 6 விஷயங்களைப் பின்பற்றுங்கள்.
சீலிங் ஃபேன் மெதுவா சுத்துதா? இந்த 6 விஷயங்களை கவனிங்க!
கோடையின் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பலரும் ஏசி, ஏர் கூலர்களை வாங்க கடைகளுக்கு படையெடுக்கின்றனர். ஆனால் பெரும்பாலானோர் ஏசி வாங்க முடியாத சூழலில் உள்ளனர். நடுத்தர மற்றும் ஏழை மக்களை வெப்பத்தில் இருந்து சற்று காப்பது இந்த மின் விசிறிகள் என்றால் மிகையல்ல. வீட்டை விட்டு கடை வீதிக்கு சென்று வந்தால் கூட ஒரு 5 நிமிடமாவது மின்விசிறிக்கு கீழே நின்றால்தான் அந்த சோர்வு நீங்கும். இரவிலும் வெப்பத்தின் தாக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதுவும் வீடுகள் மாடியில் இருந்து விட்டால் நிலைமை அதோ கதிதான். ஃபேன் போட்டால் கூட வியர்வை கொட்டிக்கொண்டேதான் இருக்கும் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கிறது. வடிவேலு ஒரு காமெடி காட்சியில் சொல்வாரே... " மாலா ஃபேனை 12-ம் நம்பரில் வைடி" என்று அதுபோலத்தான் ரெகுலேட்டரில் புல் ஸ்பீடு வைத்தும் காற்று சரியாக வரவில்லையே என்றுதான் எண்ண தோன்றும்.
Advertisment
இந்த சூழலில் மின்விசிறி மெதுவாக இயங்க ஆரம்பித்தால், அறை வெப்பமாகிவிடும். உடனே பொதுமக்கள் தங்கள் மின்விசிறிதான் பிரச்னை என நினைத்துக்கொண்டு புது மின்விசிரி வாங்க திட்டமிடுகின்றனர். ஆனால் அதற்கு முன்pu சில விஷயங்களை செய்ய மறந்து விடுகின்றனர். மின்விசிறியில் சிறிய குறைபாடு கூட அதன் வேகத்தை குறைக்கலாம். எனவே, மின்விசிறியின் வேகத்தை அதிகரிக்க இந்த 6 விஷயங்களைப் பின்பற்றுங்கள்.
1. மின்விசிறியின் பிளேடுகள் மீது நாம் கவனம் செலுத்துவதில்லை. மின்விசிரி மெதுவாக சுற்றுவதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே மின்விசிரி வளைந்தோ, நெளிந்தோ இருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
2. மின்விசிறிகளில் அழுக்கு, தூசி மற்றும் குப்பைகள் சேர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மின்விசிரியின் வேகம் குறைய வாய்ப்புள்ளது. எனவே அடிக்கடி மின்விசிரியை சுத்தம் செய்யுங்கள்.
Advertisment
Advertisements
3. ஃபேன் வேகமாக சுற்றுவது இல்லை என்றால், அதற்கு கண்டென்ஸர் (condenser) போயிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கண்டென்ஸ்ரை மாற்றினால் ஃபேன் ஃபுல் ஸ்பீடில் சுற்றும். 2.5 எம்.எஃப்.டி கண்டென்ஸர் வாங்கி நாமே எளிதில் மாட்டிவிட முடியும். ஃபேனின் மோட்டாருக்கு மேலே சிறிய டப்பா போல இருக்கும். அதில் இணைக்கப்பட்டு இருக்கும் வயரை கழற்றி புதிய கண்டென்சரை வாங்கி அதில் மாட்டி விட்டால் போதும்.. இப்போது உங்கள் ஃபேனின் வேகத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
4. மின்விசிறியின் ரெகுலேட்டர்தான் மோட்டார் வேகத்தை கட்டுப்படுத்துகிறது. அதிக நாட்கள் பயன்படுத்தும்போது குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதனை கண்டறிந்து மாற்றுவது முக்கியம்.
5. மின்விசிறியின் மோட்டாருக்கு லூப்ரிகேசன்ஸ் மிக முக்கியம். 24 மணிநேரமும் ஓடக்கூடியது என்பதால் மாதம் ஒரு முறையோ அல்லது 2 மாதத்திற்கு ஒருமுறையோ ஃபேன் மோட்டாருக்கு லூப்ரிகேசன்ஸ் செய்ய வேண்டும்.
6. மின்விசிறியின் இறக்கையில் உராய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது மின்விசிறியின் வேகத்தை குறைக்கிறது.