டாப் 5 ஸ்மார்ட் போன்கள்: பட்ஜெட் ரேட்... பக்கா மாடல்கள்!

மோட்டோ E5 வாங்குவதற்கு முன்பு இந்த போன்களையும் ஒரு முறை பார்த்துவிடுங்கள்

Moto E5 Plus, Top 5 Smartphone under Rs. 15000: மிக சமீபத்தில் மோட்டோ தன்னுடைய பட்ஜெட் போனான மோட்டோ E5 மற்றும் E5 ப்ள்ஸினை இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்தது.

இதனுடைய சிறப்பம்சங்கள் அனைத்தும் ஒரு பட்ஜெட் போனிற்கு தேவையான அளவு நிறைவாக இருக்கிறது. ஆனால் மோட்டோ E5 மற்றும் E5 ப்ள்ஸ் ஆகியவற்றின் விலையை கணக்கில் கொண்டால், அதே விலைக்கு அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய போன்கள் இன்றைய மார்க்கெட்டில் நிறைய இருக்கின்றன.

அதில் இந்த ஐந்து போன்கள் டாப் 5 இடத்தைப் பிடித்து மோட்டோ E5 மற்றும் E5 ப்ள்ஸ்ஸிற்கு பெரிய சவால்கள் விடுக்கின்றன.

சியோமி ரெட்மி நோட் 5

மோட்டோ E5 ப்ளஸ் 6 இன்ச் எச்.டி திரை ஆனால் சியோமியின் இந்த மாடல் 5.99 இன்ச் FHD திரையாகும். இரண்டு தொடுதிரையின் ஸ்கிரின் ஃபார்மெட் விகிதமும் 18:9 ஆகும். சியோமியின் வடிவமைப்பு முழுக்க மெட்டலினால் செய்யப்பட்டது ஆனால் மோட்டோவின் வடிவமைப்பு ப்ளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. 13எம்பி பின்பக்க கேமராக்கள் இரண்டு போன்களிலும் இருக்கிறது. சியோமியினை இயக்கும் புரோசஸ்ஸர் ஆக்டா கோர் புரோசஸ்ஸர் ஆகும் ஆனால் மோட்டோவின் புரோசஸ்ஸர் குவாட் கோர் ஆகும். பேட்டரி என்று பார்க்கும் போது சியோமியின் 4000mAh அதனுடைய செயல் திறனிற்கு சரியாக இருக்கும். ஆனால் மோட்டோவின் 5000mAh மிகவும் நல்ல பேக்கப்பினைத் தரும். ஆனாலும், சியோமியின் விலை மிகவும் குறைவு. அந்த விலைக்கு ஏற்றவாறு அதிக சிறப்பம்சங்களும் ரெட்மியில் இருக்கின்றது.

விலை: 3GB RAM/32GB இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜினை உடைய ரெட்மியின் விலை ரூ 9,999 . 4GB RAM/64GB இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜினை உடைய ரெட்மியின் விலை Rs 11,999.

ஓப்போ ரியல்மீ 1

ஓப்போ மற்றும் மோட்டோவின் இரண்டு மாடல்களுமே 6 இன்ச் தான். ஆனால் மீண்டும் ஓப்போ  FHD திரையாகும். இரண்டும் ப்ளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டவை தான். ஆனால் ஓப்போவின் ஃபைபர் கிளாஸ் மற்றும் எட்ஜ் கட்டிங் இரண்டும் ஓப்போவினை மேலும் சிறப்பாக காட்டுகிறது. மோட்டோவில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேன்னர் இருக்கிறது ஆனால் ஓப்போவில் அது இல்லை. மேலும் ஒப்போவின் பேட்டர் பேக்கப் வெறும் 3410mAh தான். ஓப்போவின் போட்டோகிராபி மற்றும் வேகம் இரண்டும் மிகச் சிறப்பு.

விலை:  3GB RAM/32GB இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜினை உடைய  ஓப்போவின் விலை Rs 8,990.   4GB RAM/64GB  இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜினை உடைய  ஓப்போவின் விலை Rs 10,990, மற்றும்  6GB RAM/128GB இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜினை உடைய  ஓப்போவின் விலை Rs 13,990 ஆகும்.

மோட்டோ G5S ப்ளஸ்

மோட்டோ G5S ப்ளஸ் இருக்கும் சிறப்பம்சங்களில் பெரும்பாதி மோட்டோ E5 ப்ளஸ்ஸில் இருக்கிறது. ஆனால் மோட்டோ G5S ப்ளஸ் 5.5 இன்ச் அளவுள்ள FHD தொடுதிரையைக் கொண்டது. இதில் 13MP+13MP என இரண்டு பின்பக்க கேமராக்களை கொண்டிருக்கிறது. ப்ரோசஸ்ஸர் ஸ்னாப்ட்ராகன் 625 என்பதால் அதிவேகமாக இயங்கும் திறனை கொண்டிருக்கிறது. பேட்டரி பேக் மட்டும் 3000mAh  என்பது இதில் சற்று குறைவான அளவீடாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

விலை:  12,999 (4GB RAM/64GB storage)

ஆசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1: 

மோட்டோ E5 ப்ளஸ் மற்றும் ஆசூஸ் இரண்டும் 6 இன்ச்  தொடுதிரையைக் கொண்டவைகளே. ஆனால் ஆசூஸ் போனின் திரை FHD திரையாகும். இரண்டு தொடுதிரையின் ஸ்கிரின் ஃபார்மெட் விகிதமும் 18:9 ஆகும்.  மோட்டோ பிளாஸ்ட்டிக்கினால் உருவாக்கப்பட்டது ஆனால் ஆசூஸ் மெட்டட்டால் உருவாக்கப்பட்டது. இந்த பட்டியலில் மற்ற போன்களுடன் ஒப்பிடுகையில் இதில் மட்டும் தான்  5000mAh பேட்டரி பேக்கப் இருக்கிறது.

விலை: 3GB RAM/32GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை Rs 10,999.  4GB RAM/64GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை Rs 12,999.

சாம்சங் கேலக்ஸி On6

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் வெளியான இந்த போனின் தொடுதிரை அளவு 5.6 இன்ச் ஆகும்.  AMOLED திரையின் ஃபார்மெட் 18.5:9. 13MP பின்பக்க கேமராவினைக் கொண்டுள்ளது. ஆனால் இதன் பேட்டர் பேக்கப் வெறும் 3000mAh தான். 7870 SoC புரோசஸ்ஸரால் செயல்படும் இந்த போன் மோட்டோவை விட அதி வேகமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விலை:  4GB RAM/64GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை Rs 14,490

×Close
×Close