இருக்கும் இடத்திற்கு உணவு தேடி வர வேண்டுமாம்? அப்ப உங்கள் மொபைலில் இவையெல்லாம் இருக்க வேண்டும்!

உணவை ஆர்டர் டெலிவரி செய்வதற்கே இப்போது தனி ஆப்கள் வந்து விட்டன.

சாப்பாடு எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதுவும் விரும்பும் உணவுகளை வீட்டிற்கே ஆர்டர் செய்து சாப்பிடும் ஒரு சுகம் இருக்கே அது சாப்பாட்டை விட அலாதியானது. அதனால் தான் பெரும்பாலான ஹோட்டலில்களில் ஃபீரி ஹோம் டெலிவரி என்ற வசதியும் வழங்கப்படுகிறது.

வீட்டில் இருந்தப்படியே மொபைலில் தேவையான உணவை ஆர்டர் செய்துவிட்டால் போது, சரியான நேரத்தில் உங்கள் கையில் உணவு இருக்கும்.  இந்த உணவை ஆர்டர் டெலிவரி செய்வதற்கே இப்போது தனி ஆப்கள் வந்து விட்டன. அப்படி பிளேஸ்டோரில் போய் ஃபுட் டெலிவரி ஆப்கள் என்று தேடினால் போதும் ஒரு மெகா பட்ஜெட் போல் சில ஆப்கள் வரிசையாக வந்து நிற்கும்.

ஆனால், அவை எல்லாமே சிறந்தவையா? என்று கேட்டால் அது சந்தேகம் தான். ஆனால் சில குறிப்பிட ஃபுட் டெலிவரி ஆப்கள் இன்றை உலகில் டாப் ரன்னிங்கில் இருக்கின்றன. எப்போதாவது உங்களுக்கு வீட்டில் இருந்தப்படியே உணவு வேண்டும் என்றால் கட்டாயமாக இந்த ஆப்கள் பெரிதளவில் பயன்படும்.

எந்த இடத்திற்கு சென்றாலும், அதன் அருகில் இருக்கும் உணவகங்களை சுட்டிக்காட்டுவதற்காகவே வடிவமைக்கப்பட்டது தான் இந்த செயலிகள். அந்த உணவகங்களில் சாப்பிட்டவர்களின் கருத்துக்கள் அந்த செயலியில் பதிவிடப்பட்டுள்ளதால், சுவையான உணவு அளிக்கக்கூடிய உணவகங்களை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

Zomato

Swiggy

Foodpanda

 

Faaso’s

FreshMenu

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close