Top gadgets and tech accessories under Rs 1000 : ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வந்தாலே இளம் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறக்கும், தலைக்கு மேல் பல்ப் எரியும், ஜில்லு காற்றடிக்கும் சுற்றி நின்று யாரோ இளையராஜா பாட்டை வாசிப்பது போலவே இருக்கும். ஆண்கள்/பெண்கள் தங்களின் துணைக்குப் பரிசு தேடுவதும், அந்தப் பரிசுக்காக கடை கடையாக ஏறி இறங்குவதும் வாடிக்கையான ஒன்று தானே.
அதிலும், பெண்களுக்குக் கூட எளிதில் பரிசு கிடைத்துவிடும். ஆனால் இந்த ஆண்களுக்குப் பரிசு வாங்கப் பெண்கள் படும் பாடு இருக்கே... அப்பப்பா வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு அது ஒரு இடியாப்பம் சிக்கல்.
valentines day gift under Rs 1000 : 1000 ரூபாய்க்கு கீழ் பரிசுகள்
எப்போது பார்த்தாலும் ஷர்ட், பேண்ட் அல்லது வாட்ச். இதை விட்டால் வேறு எந்தப் பரிசும் இல்லையா என்று கேட்கும் அளவிற்குச் சளிப்பு தட்டிவிடுகிறது. ஆனால் அந்தக் குழப்பத்தை தெளிவுபடுத்தும் தொகுப்பு தான் இது. இந்தச் செய்தி தொகுப்பும், வெறும் 1000 ரூபாய் இருந்தால் என்னென்ன கிஃப்ட் வாங்கலாம் என்று சுருக்கமாக சொல்கிறோம்.
1. போர்டிரானிக்ஸ் சார்ஜர் (Portronics 6 Ports 8A Home Charging Station) :
விலை : ரூ. 695/-
/tamil-ie/media/media_files/uploads/2019/02/portronics-charger.jpg)
ஒரே நேரத்தில் எல்லா இயந்திரத்திர்கு சார்ஜ் ஏற்றுவது கடினமான ஒன்று. உங்களிடம் ஒன்றிற்கும் மேற்பட்ட செல்போன்கள், டாப்ளட் மற்றும் ஐபாட் போன்ற இயந்திரங்கள் இருந்தால், இந்த போர்டிரானிக்ஸ் சார்ஜர் உங்களுக்கானது தான். இந்த கருவியின் மூலம், ஒரே நேரத்தில் 6 கருவிகளுக்கு சார்ஜ் செய்ய முடியும். இதன் ஒவ்வொரு பிளக்கிலும் ஒரு சிறிய எல்.இ.டி லைட் இருக்கும். நீங்கள் எந்த பிளக்கில் சார்ஜ் செய்கிறீர்களோ அந்த லைட் வேலை செய்யும்.
2. கேசியோ டிஜிட்டல் வாட்ச் (Casio F91W digital watch)
விலை : ரூ. 995/-
/tamil-ie/media/media_files/uploads/2019/02/casio-digital-watch.jpg)
டிஜிட்டல் வாட்ச் என்றாலே அதற்கு பெயர்போன நிறுவனம் கேசியோ தான். F91W-1 திறன் கொண்ட இந்த வாட்ச்சில் எல்.சி.டி ஸிக்ரீன், மூன்று பட்டன்கள் மற்றும் இரவு நேரத்தில் நேரம் தெரிய லைட் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, இதில் ஸ்டாப் வாட்ச், அலாரம் மற்றும் கேலண்டர் உள்ளது. குறிப்பாக இந்த வாட்ச் வாட்டர் புரூஃப், தண்ணீர் பட்டாலும் ஒரு சேதமும் ஆகாது.
3. சயோமி எம்.ஐ பவர் பேங்க் (Xiaomi Mi Power Bank 2i (10,000mAh))
விலை : ரூ. 899/-
/tamil-ie/media/media_files/uploads/2019/02/mi-power-bank.jpg)
அனைவரும் கையில் தினமும் எடுத்துச் செல்லும் முக்கியமான பொருட்களில் ஒன்றாக இருப்பது பவர் பேங்க். உங்களுக்கும் ஒரு பவர் பேங்க் வேண்டுமென்றால் சந்தேகமே இல்லாமல் எம்.ஐ பவர் பேன்க் 2ஐ வாங்கலாம். 10000 எம்.ஏ.எச் பவர் கொண்ட இந்த பவர் பேங்க் ஒரு முறை முழு சார்ஜ் போட்டு வைத்தால் போதும். உங்கள் செல்போனை குறைந்தபட்சம் மூன்று முறையாவது 100% சார்ஜ் செய்ய முடியும். குறைந்த விலையில் கிடைக்கும் உபயோகமான பொருட்களில் இதுவும் ஒன்று.
4. சயோமி எம்.ஐ புளூடூத் ஸ்பீக்கர் 2 (Xiaomi Mi Bluetooth Speaker 2)
விலை : ரூ. 799/-
/tamil-ie/media/media_files/uploads/2019/02/mi-speaker.jpg)
இதுவரை ஸ்மார்ட்போன் மற்றும் செல்போன் உபகரணங்களில் சிறந்து விளங்கிய சயோமி தற்போது ஸ்பீக்கரிலும் தனது வித்தையை காட்டி வருகிறது. கைக்குள் அடங்கும் அளவிற்கு இருக்கும் இந்த ஸ்பீக்கர் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். உங்கள் கைப்பையில் கூட வைத்துக் கொள்ளும் வகையில் அழகாக அளவாக அமைக்கப்பட்டிருக்கிறது. டேப்லெட், லேப்டாப் அல்லது செல்போனில் இருந்து புளூடூத் வழியாக இந்த ஸ்பீக்கரை கனெக்ட் செய்து பாடல் கேட்களாம்.
5. கோக்கி ஆக்டிவிட்டி டிராக்கர் (Goqii Stride activity tracker)
விலை : ரூ. 399/-
/tamil-ie/media/media_files/uploads/2019/02/goqii-stride.jpg)
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றை எல்லாம் பதிவு செய்யும் கருவி தான் ஆக்டிவிட்டி டிராக்கர். உடல் ஆரோக்கியம் மீது அதிக கவனம் செலுத்துபவர்களுக்கு இந்த ஆக்டிவிட்டி டிராக்கர் மீது எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கும். குறைந்த விலையில், சிறந்த அக்டிவிட்டி டிராக்கர் வேண்டுமென்றால் கோக்கி தான் பெஸ்ட். கைகளில் வாட்ச் போல கட்ட விருப்பம் இல்லாதவர்கள் காட்களில் அணியும் ஷூவில் கட்டிக் கொள்ளலாம். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கால் அடியும் இது துள்ளியமாக பதிவு செய்யும். ஒரு முறை சார்ச் போட்டால் 180 நாட்களுக்கு வேலை செய்யும் திறனை இது கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கின்றார்கள்.உங்கள் செல்போனுடன் கனெக்ட் செய்து அனைத்து தகவலையும் சேகித்து வைக்கலாம்.