இந்திய தயாரிப்பின் பெஸ்ட் மின்சார ஸ்கூட்டர் – நீங்கள் இன்றே வாங்கலாம்

முன்னனி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களை நீங்கள் இன்றே வாங்கலாம். நீண்ட காலமாக இந்தியாவில் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் இடங்களிலோ அல்லது சிறிய பட்டறைகளிலோ தயாரிக்கும் நபர்களிடம் இருந்து வந்தவை. இப்போது முன்னனி இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் டிவிஎஸ், பஜாஜ் போன்ற நிறுவனங்கள் தயாரித்த மினசார இருசக்கர வாகனங்கள் சந்தைக்கு வந்துள்ளன. Bajaj Chetak மின்சார ஸ்கூட்டரை முதலில் கொண்டு வந்தது பஜாஜ் நிறுவனம் […]

Top made-in-India electric scooters you can buy today
Top made-in-India electric scooters you can buy today

முன்னனி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களை நீங்கள் இன்றே வாங்கலாம்.

நீண்ட காலமாக இந்தியாவில் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் இடங்களிலோ அல்லது சிறிய பட்டறைகளிலோ தயாரிக்கும் நபர்களிடம் இருந்து வந்தவை. இப்போது முன்னனி இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் டிவிஎஸ், பஜாஜ் போன்ற நிறுவனங்கள் தயாரித்த மினசார இருசக்கர வாகனங்கள் சந்தைக்கு வந்துள்ளன.

Bajaj Chetak

மின்சார ஸ்கூட்டரை முதலில் கொண்டு வந்தது பஜாஜ் நிறுவனம் தான். இது தனது ’சேட்டக்’ என்ற பெயர் பலகையை மறுபடியும் கொண்டு வந்துள்ளது. ’Vespa’ வால் ஈர்க்கப்பட்ட ஒரு வடிவமைப்பில் Bajaj Chetak ஸ்கூட்டர் காட்சியளிக்கிறது, இது வெகுஜெனங்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று தான். பஜாஜ் தனது ஸ்கூட்டரில் all-LED விளக்குகள் மற்றும் sequential turn indicator ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அதன் instrument console டிஜிட்டல் மயமாக்கப்பட்டது மேலும் ஸ்மார்ட் கைபேசி இணைப்பு வசதியும் இதில் உள்ளது.

IP67-rated 3kWh பாட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு வகையான சவாரி முறைகளை தேர்வு செய்து கொள்ளும் வசதி உள்ள இந்த ஸ்கூட்டரில் ஒரு முறை சார்ஜ் செய்து 95 கிலோமீட்டர் தூரம் பயணிக்கலாம். மின்சாரத்தில் இயங்கும் Bajaj Chetak ஸ்கூட்டரை பெங்களூரூ மற்றும் பூனே நகரங்களில் வாங்கலாம். Urban model வண்டியின் விலை ரூபாய் ஒரு லட்சம் மற்றும் Premium மாடலின் விலை ரூபாய் 1.15 லட்சம்.

TVS iQube

TVS iQube ஓசூர் நகரில் இருந்து வெளிவரும் முதலாவது மின்சார ஸ்கூட்டர் அல்ல. Scooty Teenz என்ற வண்டி பத்து ஆண்டுகளுக்கு முன்னரே வெளிவந்துவிட்டது.

இந்த iQube ஸ்கூட்டரில் மூன்று Li-ion battery packs உள்ளன. அமைதியான hub-mounted மோட்டார் 4.4kW திறனை உற்பத்தி செய்யும். மேலும் ஒரு முறை சார்ஜ் செய்து 75 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம். Eco மற்றும் Power என இரண்டு வகையான mode கள் இதில் உள்ளன. பெங்களூரூவில் மட்டுமே கிடைக்கும் இந்த மின்சார ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1.15 லட்சம்.


Ather 450X

அதிகம் விற்பனையாகக்கூடிய தனது பழைய மாடல் ஸ்கூட்டரை இன்னும் மேம்படுத்தி அதை Ather 450X என்ற புதிய பெயரில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது Ather. பழைய மாடலான 450 யும் விற்பனைக்கு கிடைக்கிறது.

புதிய 450X பழைய 450 ஐ விட சற்று வித்தியாசமாக உள்ளது. இது 6kW peak திறனை வெளியிடும், மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் ஆற்றல் கொண்டது. ரூபாய் 1.49 லட்சம் விலை வரும் இந்த மின்சார ஸ்கூட்டர் இந்தியாவின் 10 நகரங்களில் கிடைக்கிறது.


Okinawa Praise Pro

மக்கள் இதை சீனத்தின் மறுசீரமைக்கப்பட்ட பதிப்பு என அழைத்தாலும் இது நூறு சதவிகிதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை மட்டுமே விற்பனை செய்கிறது. Li-ion battery ஐ பிரித்து எடுக்க கூடிய வசதி உள்ள ஒரே ஸ்கூட்டர் இது மட்டும் தான். மேலும் ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 110 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடிய ஸ்கூட்டரும் இதுமட்டும்தான்.

Eco, Sport மற்றும் Turbo என மூன்று விதமான riding modes இந்த ஸ்கூட்டரில் உள்ளது. இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும் என்று கூறப்படும் இந்த Okinawa Praise Pro ஸ்கூட்டர் இந்தியாவில் ரூபாய் 79,277 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Top made in india electric scooters you can buy today ather 450x bajaj chetak and more

Next Story
ஜிஎஸ்டி எதிரொலி: ஐ-போன் 7, 6எஸ் விலை குறைப்பு; வாங்கலாமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com