பிரிண்டர் வாங்குறீங்களா?.. வீடு, ஆஃபீஸ்-க்கு ஏற்ற சூப்பர் ஃபீச்சர்ஸ் பிரிண்டர்கள்!

மலிவான விலையில் கிடைக்கும் இன்க்ஜெட் பிரிண்டர்கள் முதல், பெரிய வேலைகளுக்கான லேசர் பிரிண்டர்கள் வரை பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. மாணவர்கள், வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் என அனைவருக்கும் ஏற்ற, சில முக்கிய பிரிண்டர்களைப் பற்றி பார்ப்போம்.

மலிவான விலையில் கிடைக்கும் இன்க்ஜெட் பிரிண்டர்கள் முதல், பெரிய வேலைகளுக்கான லேசர் பிரிண்டர்கள் வரை பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. மாணவர்கள், வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் என அனைவருக்கும் ஏற்ற, சில முக்கிய பிரிண்டர்களைப் பற்றி பார்ப்போம்.

author-image
Meenakshi Sundaram S
New Update
Top Printers

பிரிண்டர் வாங்குறீங்களா?.. வீடு, ஆஃபீஸ்-க்கு ஏற்ற சூப்பர் ஃபீச்சர்ஸ் பிரிண்டர்கள்!

ஆபீஸ் அல்லது வீட்டிற்கு அவசியமான சாதனங்களில் ஒன்று பிரிண்டர். அன்றாட அச்சிடும், ஸ்கேன் செய்யும், நகலெடுக்கும் பணிகளுக்கு ஏற்ற வகையில், பல்வேறு பிரிண்டர்களை ஃப்ளிப்கார்ட் விற்பனை செய்கிறது. குறைந்த விலை இன்க்ஜெட் பிரிண்டர்கள் முதல் அதிநவீன லேசர் பிரிண்டர்கள் வரை, உங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற பல விருப்பங்கள் உள்ளன. மாணவர்கள், பணியாளர்கள் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு, இந்த பிரிண்டர்கள் ஆவணப் பணிகளைச் சீராகவும் திறமையாகவும் செய்ய உதவும். ஃப்ளிப்கார்ட்டில் கிடைக்கும் சில சிறந்த பிரிண்டர்களின் அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

1. கனான் பிக்ஸ்மா E3370 இன்க்ஜெட் பிரிண்டர்

Advertisment

போட்டோ பிரியர்களுக்கும், வீட்டில் ஸ்மார்ட்போன் மூலம் பிரிண்ட் எடுக்க விரும்புபவர்களுக்கும் இது பெஸ்ட் சாய்ஸ். இதன் கச்சிதமான வடிவமைப்பு, எந்த மேசையிலும் எளிதாகப் பொருந்தும். சூப்பர் ஃபீச்சர்ஸ், ஸ்மார்ட்போன், லேப்டாப் மூலம் நேரடியாக பிரிண்ட் எடுக்க வைஃபை வசதி. போட்டோக்களை பார்டரில்லாமல் கலர் பிரிண்ட் எடுக்கலாம். பிரிண்ட், ஸ்கேன், காப்பி என அனைத்து வசதிகளும் ஒரே கருவியில்.

2. எப்சன் L130 இன்க்ஜெட் பிரிண்டர் 

அடிக்கடி அதிகளவில் பிரிண்ட் எடுக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த எப்சன் பிரிண்டர் வரப்பிரசாதம். இதன் பெரிய மை டேங்க், பக்கத்துக்கு ஆகும் செலவை குறைக்கிறது. அதிக பக்கங்களை அச்சிட உதவும் 4 மை பாட்டில்கள். எழுத்துக்களும், படங்களும் மிகத் தெளிவாக இருக்கும். ஸ்கேன், காப்பி வசதி இல்லாததால், பிரிண்டிங்கில் மட்டும் முழு கவனம் செலுத்தலாம்.

3. கனான் பிக்ஸ்மா MG2470 இன்க்ஜெட் பிரிண்டர் 

பிரிண்டர் பயன்படுத்தத் தெரியாதவர்களும் எளிதாகப் பயன்படுத்தலாம். இதன் ஆல்-இன்-ஒன் வசதி, வீட்டுப் பயன்பாடுகளுக்குத் தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்குகிறது. பிரிண்ட், ஸ்கேன், காப்பி வசதி இதில் உள்ளது. சாதாரண கார்ட்ரிட்ஜ்களில் இயங்குவதால், மை எளிதாகக் கிடைக்கும். கச்சிதமான வடிவமைப்பு.

4. ஹெச்பி டெஸ்க்ஜெட் இன்க் அட்வான்டேஜ் 2338 

Advertisment
Advertisements

பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய விரும்பும் மாணவர்களுக்கு இது சிறந்த தேர்வு. இதன் எளிமையான அமைப்பும், கச்சிதமான வடிவமைப்பும் எந்த இடத்திலும் எளிதாகப் பொருந்தும். ஒரு மை பாட்டில் உடன் வருகிறது. அனைத்துப் பணிகளுக்கும் ஒரே கருவி. ஹெச்பி ஸ்மார்ட் ஆப் மூலம் கட்டுப்படுத்தலாம்.

வேகமான, தெளிவான மற்றும் குறைந்த செலவில் அச்சிட, ஃப்ளிப்கார்ட்-ல் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற பிரிண்டரை தேர்வு செய்யுங்கள். நம்பகமான பிராண்டுகள், எளிதான ரீஃபில் வசதிகள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் பிரிண்டரை வாங்குங்கள்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: