2018 - ல் 35 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி... பெஸ்ட் ஸ்மார்ட்போன் பிராண்டாக தேர்வு...

சியோமி, சாம்சங், ஒன்பிளஸ், ஓப்போ, விவோ, ஹவாய், ஆப்பிள், மற்றும் நிறுவனங்கள் சிறந்த ஸ்மார்ட்போன்களை இந்த வருடம்

Top smartphone brands of 2018 : 2018ம் ஆண்டி, அமெரிக்கா மற்றும் சீனாவைத் தொடர்ந்து இந்தியாவில் மட்டும் தான் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி மிகவும் பிரகாசமாக இருந்தது இந்த ஆண்டு.

முதன்முறையாக ஸ்மார்ட்போன்கள் வாங்குபவர்களுக்கும் சிறந்த அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டனர் நிறுவனங்கள்.

சியோமி, சாம்சங், ஆப்பிள், ஹவாய், ஓப்போ, விவோ, மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்கள் சிறந்த ஸ்மார்ட்போன்களை இந்த வருடம் இந்தியர்களுக்காக வெளியிட்டனர்.

கடந்த 12 மாதங்களில் வெளியான சிறந்த ஸ்மார்ட்போன்கள் எதுவென ஒரு பார்வை.

Top smartphone brands of 2018

Top smartphone brands of 2018 : Xiaomi

இந்த வருடம் மட்டும் சுமார் 35 மில்லியன் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்றுள்ளது இந்த நிறுவனம். சைபர்மீடியா ரிசர்ச் வெளியிட்ட அறிவிப்பின் படி, ரெட்மீ நோட் 5 ப்ரோ, ரெட் மீ 6, சியோமி மை ஏ2 போன்ற போன்களை இந்த வருடம் வெளியிட்டது சியோமி.

பட்ஜெட் வாடிக்கையாளர்களை அதிகம் கவரும் வகையில் போன்களின் விலை இருந்த காரணத்தால், வெளியான அனைத்து போன்களுமே ஹிட்.

ஒன்ப்ளஸிற்கு இணையான போன்களை உருவாக்குவதாக பிக்கோ போனை வெளியிட்டது சியோமி. ஆனாலும் ஆண்ட்ராய்ட் செக்மெண்ட்டில் சியோமி இன்னும் வளர வேண்டியது உள்ளது.

Top smartphone brands of 2018: Samsung

அக்டோபர் இறுதி வரையில், இந்தியாவில் மட்டும் சுமார் 32 மில்லியன் போன்களை விற்றுள்ளது சாம்சங் நிறுவனம். சென்ற வருடத்தை விட, இந்த வருடம் அதிக அளவு இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் நிறைய மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.

ஆன்லைனில் மட்டும் இல்லாமல் ஆஃப்லைனிலும் இழந்த சந்தை மதிப்பை திரும்பப் பெறும் முயற்சியில் மிகப்பெரிய மொபைல் ஷோரூமை பெங்களூரில் திறந்துள்ளது சாம்சங் நிறுவனம்.

2018 – ல் கேலக்ஸி ஜே 6, கேலக்ஸி ஜே 6+, கேலக்ஸி எஸ்9 மற்றும் நோட் 9 ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்த வரும வெளியானது.

மேலும் படிக்க : இந்த வருடத்தில் வெளியான இன்னோவேட்டிவ் ஸ்மார்ட்போன்கள் எவை ?

Top smartphone brands of 2018: OnePlus

மிக குறைந்த விலையில் ப்ரீமியம் போன்களை வெளியிடும் நிறுவனமாக அறியப்பட்டுள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். ஒன்ப்ளஸ் 6 மற்றும் ஒன்ப்ளஸ் 6டி என இரண்டு போன்களை இந்த வருடம் வெளியிட்டுள்ளது இந்நிறுவனம்.

சிறந்த டிசைன், செயல்திறன், கேமரா, மற்றும் பேட்டரி லைஃப் என எந்த குறையும் இல்லாமல் நிறைவான சேவையை தரும் நிறுவனமாக பெயர் பெற்றிருக்கிறது ஒன்ப்ளஸ்.

Top smartphone brands of 2018: Oppo/Vivo

பிபிகே நிறுவனத்தின் இரண்டு முக்கிய போன்களாக அறியப்படும் ஓப்போ மற்றும் விவோ இந்த வருடத்தில் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியை பெற்றிருக்கிறது.

ஓப்போவின் ஃபைண்ட் எக்ஸ் போனும், விவோவின் நேக்ஸ் போன்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Vivo X21 இந்த மிட்ரேஞ்ச் ப்ரிமியம் போன், வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இன் – ஸ்கிரீன் ஃபிங்கர் பிரிண்ட் வைத்து வெளியான முதல் போன் இதுவே.

விவோ, மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் 4000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. ஓப்போ நொய்டா அருகே இண்டஸ்ட்ரியல் பார்க் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

விவோ இந்த வருடம் 11 மில்லியன் போன்களை விற்றுள்ளது. ஓப்போ 1 கோடி போன்களை இந்தியாவில் விற்றிருக்கிறது.

Top smartphone brands of 2018 : ஹவாய் / ஹானர்

40 லட்சம் போன்களை இந்தியாவில் இந்த வருடம் விற்றுள்ளது ஹானர் நிறுவனம். கடந்த வருடத்தோடு ஒப்பீடு செய்கையில் மேட் 20 ப்ரோ, ஹானர் 9N, ஹானர் பிளே போன்ற போன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றிருக்கிறது.

Top smartphone brands of 2018 : ஆப்பிள்

பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கிய ஆப்பிளின் ஐபோன்கள் இந்தியாவில் இந்த வருடம் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கிவிடவில்லை.

விலை மற்றும் தொடர்ந்து எழுந்த புகார்களின் காரணமாகவும் கூட இந்த போன்களின் விற்பனை குறைவாகியது இந்த வருடம். ஆனாலும் கூட, மற்ற ஸ்மார்ட்போன்கள் பெறும் லாபத்திற்கு நிகரான லாபத்தினை குறைந்த அளவு செல்போன்களை விற்றே ஈட்டியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close