சவுண்ட்பார் வாங்க சூப்பர் சான்ஸ்... வெறும் ரூ.3,000-க்குள் கிடைக்கும் பீரிமியம் மாடல்கள்!

வெறும் ரூ.3,000-க்குள் கிடைக்கும் மாடல்கள் முதல், பிரீமியம் அம்சங்கள் கொண்ட சவுண்ட்பார்கள் வரை, அமேசான் சேலில் கிடைக்கும் சிறந்த சலுகைகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

வெறும் ரூ.3,000-க்குள் கிடைக்கும் மாடல்கள் முதல், பிரீமியம் அம்சங்கள் கொண்ட சவுண்ட்பார்கள் வரை, அமேசான் சேலில் கிடைக்கும் சிறந்த சலுகைகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

author-image
Meenakshi Sundaram S
New Update
Dolby Atmos Soundbar

சவுண்ட்பார் வாங்க சூப்பர் சான்ஸ்... வெறும் ரூ.3,000-க்குள் கிடைக்கும் பெஸ்ட் சவுண்ட்பார்ஸ்!

உங்கள் வீட்டிற்குத் தேவையான சிறந்த சவுண்ட்பாரை வாங்க இதுவே சரியான தருணம். உங்கள் டிவியின் ஒலித் தரம் போதுமானதாக இல்லை என்று நினைத்தால், சலுகை காலத்தில் கிடைக்கும் சிறந்த சவுண்ட்பார்களை குறைந்த விலையில் வாங்கி, தியேட்டர் போன்ற அனுபவத்தை வீட்டிலேயே பெறலாம். வெறும் ரூ.3,000-க்குள் கிடைக்கும் மாடல்கள் முதல், பிரீமியம் அம்சங்கள் கொண்ட சவுண்ட்பார்கள் வரை, அமேசான் சேலில் கிடைக்கும் சிறந்த சலுகைகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

Zebronics 90 Watts

Advertisment

அமேசானில் ரூ.2,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ள Zebronics 90 Watts சவுண்ட்பார், பட்ஜெட் விலையில் சிறந்த தேர்வாக அமைகிறது. SBI வங்கி கார்டு பயன்படுத்தி வாங்கும்போது மேலும் கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். இந்த சவுண்ட்பார், சிறந்த ஒலியை வழங்கும் Dual Driver அமைப்புடன் வருகிறது. HDMI ARC மற்றும் Bluetooth v5.1 இணைப்பு வசதிகளை ஆதரிக்கிறது. மேலும், தியேட்டர் அனுபவத்தை அளிக்கும் Dolby Audio ஆதரவும் இதில் உள்ளது. சிறிய அறைகளுக்கும், ஸ்மார்ட் டிவிகளுக்கும் இது சிறந்த ஆடியோ துணை சாதனமாகும்.

Mivi Fort Hip-Hop 4000

அதிக ஒலித்திறன் கொண்ட சவுண்ட்பாரை தேடுபவர்களுக்கு Mivi Fort Hip-Hop 4000 நல்ல தேர்வாக இருக்கும். இதன் அசல் விலை ரூ.6,999. ஆனால், சேல் சலுகையின் கீழ், ரூ.1,000 கூப்பன் தள்ளுபடி மற்றும் ரூ.699 வங்கிச் சலுகை சேர்த்து, இதை வெறும் ரூ.5,300-க்கு வாங்கலாம். இந்த சவுண்ட் பார், அதிவேக ஆடியோ அனுபவத்திற்காக 400 Watts பவர் வெளியீட்டுடன் வருகிறது. இதில் பல்வேறு EQ & இன்புட் மோட்கள் உள்ளன, இதனால் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒலியை மாற்றியமைக்க முடியும். மேலும், இந்த சவுண்ட்பார் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது (Made in India) என்பது குறிப்பிடத்தக்கது.

boAt Aavante Bar 490

பட்ஜெட் விலையில், போர்ட்டபிள் வசதியுடன் சவுண்ட்பார் வேண்டுமென்றால், boAt Aavante Bar 490 சரியான தேர்வாக இருக்கும். இதன் அசல் விலை ரூ.3,490. ஆனால், இப்போது வெறும் ரூ.999-க்கு தள்ளுபடியில் கிடைக்கிறது.  இது 10W Signature Sound-ஐ வழங்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 7 மணி நேரம் வரை பேட்டரி லைஃப் நீடிக்கும். இதில் பில்ட்-இன் மைக்ரோஃபோன் இருப்பதால், அழைப்புகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். சிறிய கூட்டங்கள் மற்றும் தனிப்பட்ட பயன்பாடுகளுக்கு இது சிறந்த சவுண்ட்பார் ஆகும்.

Samsung 150 W Dolby Digital Soundbar

Advertisment
Advertisements

சாம்சங் பிராண்டை விரும்புபவர்களுக்கு, Samsung 150 W Dolby Digital Bluetooth Soundbar பிரீமியம் தேர்வாக உள்ளது. இதன் அசல் விலை ரூ.8,998. வங்கிச் சலுகையாக ரூ.1,500 தள்ளுபடி இருப்பதால், இதை வெறும் ரூ.7,498-க்கு வாங்கலாம். 150 Watts பவர், Dolby Digital தொழில்நுட்பத்துடன், இது தெளிவான மற்றும் ஆழமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. எந்தவொரு இடையூறும் இல்லாமல் டிவிக்கு முழுமையான ஆடியோ அனுபவத்தை சேர்க்கிறது. குறைந்த விலையில் சிறந்த சவுண்ட்பாரை வாங்கி, உங்கள் வீட்டு பொழுதுபோக்கு அனுபவத்தை மேம்படுத்துங்கள்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: