உலகம் முழுவதும் ஏப்ரல் 8-ம் தேதி முழு சூரிய கிரகண நிகழ்வு நடைபெற உள்ளது. குறிப்பாக இது அமெரிக்கா, மெக்சிகோ, கனடா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் கிரகணம் முழுமையாக தென்படும்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு வரும் போது நிலவு சூரியனை மறைத்து இருள் சூழப்படும். பின்னர் அப்படியே நிலவு நகர்ந்து செல்லும். இதுவே முழு சூரிய கிரகணம்.
மெது மெதுவாக இந்த நிகழ்வு நடைபெறும். பகுதியளவு, பாதி அளவு சூரியன் மறைந்து பின்னர் முழுமையாக கிரகணம் தென்படும். இந்த நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க கூடாது. பாதுகாப்பான கண் கருவிகள் அணிந்து பார்க்க வேண்டும்.
நிலவு சூரியனை முழுமையாக மறைக்கும் நிகழ்வு பெய்லின் பீட்ஸ் எனக் கூறப்படுகிறது. இது நிகழ்வின் உச்ச கட்டத்தில் நிகழும். அப்போது சூரியன் முழுமையாக மறைந்து பின்னணியில் நிலவின் ஒளி தெரியும். அது ஒரு வைரம் ஜொலிப்பது போல் இருக்கும்.
இது ஒரு அற்புதமான நிகழ்வாகும். இந்த நிகழ்வு அதிகபட்சமாக மெக்சிகோவின் டோரியான் அருகே நீடித்து இருக்கும். அங்கு இந்த நிகழ்வு 4 நிமிடங்கள் மற்றும் 28 வினாடிகள் வரை நீடித்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இருப்பினும் இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகண நிகழ்வு தென்படாது. எனினும் பல்வேறு லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் கண்டு களிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“