முழு சூரிய கிரகணம்: இந்தியாவில் இருந்து ஆன்லைனில் இலவசமாக பார்ப்பது எப்படி?
Total Solar Eclipse 2024: முழு சூரிய கிரகணத்தை இந்தியாவில் வசிப்பவர்கள் பார்க்க முடியாது என்றாலும், வாழ்நாளில் ஒருமுறை நிகழும் இந்த அரிய நிகழ்வை ஆன்லைனில் இலவசமாக பார்க்கலாம்.
Total Solar Eclipse 2024: முழு சூரிய கிரகணத்தை இந்தியாவில் வசிப்பவர்கள் பார்க்க முடியாது என்றாலும், வாழ்நாளில் ஒருமுறை நிகழும் இந்த அரிய நிகழ்வை ஆன்லைனில் இலவசமாக பார்க்கலாம்.
உலகமே எதிர்பார்க்கும் முழு சூரிய கிரகண நிகழ்வு நாளை (ஏப்ரல் 8) நிகழ உள்ளது. நிலவு சூரியனை முழுமையாக மறைக்கும் போது முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த அரிய நிகழ்வை ஏப்ரல் 8 இரவு 9.13 மணியில் இருந்து மறுநாள் ஏப்ரல் 9 அதிகாலை 2.22 மணி வரை முழுமையாக காண முடியும்.
Advertisment
ஒவ்வொரு ஆண்டும், குறைந்தது 2 முதல் 5 சூரிய கிரகணங்கள் நிகழும். ஆனால் முழு சூரிய கிரகணம் 18 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே நிகழ்கின்றன. அதிலும் பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே முழு சூரிய கிரகணம் தோன்றுகிறது. ஏனெனில் பூமியில் 70 சதவிகிதம் நீரினால் சூழப்பட்டிருப்பதாலும், பாதி நிலம் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக இருப்பதாலும், முழு சூரிய கிரகணத்தைக் காண்பது மிகவும் அரிது.
முழு சூரிய கிரகணம் ஆன்லைனில் இலவசமாக பார்ப்பது எப்படி?
இந்தியாவில் சூரிய கிரகண நிகழ்வை பார்க்க முடியாது என்றாலும் ஆன்லைனில் இந்த அரிய நிகழ்வை கண்டு களிக்கலாம். முழு சூரிய கிரகண நிகழ்வை நாசா லைவ் ஸ்ட்ரீமிங்கில் வழங்குகிறது. இந்திய நேரப்படி ஏப்ரல் 8-ம் தேதி இரவு 10:30 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி அதிகாலை 1:30 மணி வரை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த இணைப்பில் கண்டு ரசிக்கலாம்.
Advertisment
Advertisements
அதோடு டெக்சாஸில் உள்ள மெக்டொனால்ட் ஆய்வகமும் முழு சூரிய கிரகண நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“