ஏப்ரல் 8-ம் தேதி இரவு முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அப்போது சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்கும். சந்திரன் சூரியனை மறைத்து பின்னர் விலகிச் செல்லும். நிலவு சூரியனை மறைக்கும் போது அதன் நிழல் பூமியில் விழுந்து கார் இருள் ஆகும். இந்த அரிய நிகழ்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை நேரடியாக வெறும் கண்களால் பார்ப்பது ஆபத்து. எனினும் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து உங்கள் ஸ்மார்ட் போனிலேயே இந்த அரிய நிகழ்வை படம் எடுக்கலாம்.
முதலில் பாதுகாப்பு
ஸ்மார்ட் போனில் படம் எடுத்தாலும் நேரடியாக சூரியனை பார்ப்பது ஆபத்தானது. பகுதியளவு மறைந்த சூரியனை (partially eclipsed Sun) படம் எடுக்க, உங்கள் ஸ்மார்ட்போனின் கேமரா சென்சாரைப் பாதுகாக்க சிறப்பு ஃபில்டர் வாங்கி பயன்படுத்தவும். அதே போல் உங்கள் கண்களை பாதுகாக்க solar viewing glasses or eclipse glasses வாங்கி அணிந்து கொள்ளவும்.
அதே சமயம் சிறிது நேரம் கழித்து சூரியன் முழுவதுமாக மறைக்கப்பட்டிருக்கும் போது உங்கள் போனின் பாதுகாப்பு ஃபில்டரை கழற்றி படம் எடுக்கவும். அப்போது தான் சூரியனின் வெளிப்புறம் கொரோனாவை படம் எடுக்க முடியும்.
அழகிய படங்கள்
சூரியனை நோக்கி நேராக போனை வைத்து படம் எடுக்க வேண்டாம். கொஞ்சம் கற்பனையாக சிந்தித்து இலைகள், மரங்கள் பயன்படுத்தி வானத்தை கவர் செய்து படம் எடுக்கலாம். சந்திரன் சூரியனுக்கு முன்னால் நகரும் போது, சுற்றியுள்ள முழு நிலப்பரப்பும் முற்றிலும் மாறுபட்ட ஒளி மற்றும் நிழல்களைக் கொண்டிருக்கும். அப்போது நீங்கள் உங்கள் கற்பனைகளை வெளி கொண்டு வந்து அந்த ஒளியைப் பயன்படுத்தி படம் எடுக்கலாம்.
பயிற்சி
கிரகணத்தன்று நேரடியாக படம் எடுக்க போகாமல் அதற்கு முன்பாகவே பயிற்சி எடுக்கலாம். அதாவது, கிரகணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு முழு நிலவு நாள் வரும் அந்த நாள் நிலவை வைத்து படம் எடுக்கலாம்.
இந்த பயிற்சி சூரிய கிரகணத்தின் போது பயனுள்ளதாக இருக்கும். நிலவை சூரியனாக கருதி படம் எடுத்து பயிற்சி செய்யலாம். உங்கள் போன் செட்டிங்ஸ், exposure போன்றவற்றை மாற்றி பயிற்சி செய்யலாம்.
பகிரலாம்
சூரிய கிரகணத்தை படம் எடுத்தப் பின் அதை சமூக வலைதளங்களில் பகிரலாம். கிரகணத்தை படம் எடுத்தப் பின் அதை மேலும் அழகாக்க சில எடிட்டிங் வொர்க் செய்யலாம். Snapseed போன்ற ஆப் பயன்படுத்தி exposure adjust செய்யலாம், crop, tweak colours போன்ற எடிட்டிங் வேலைகள் செய்யலாம்.
இந்த முழு சூரிய கிரகணம் அமெரிக்காவின் மெக்சிகோ, அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் கனடா போன்ற நாடுகளில் தென்படும். இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகணத்தை காண முடியாது. இருப்பினும் பல்வேறு நேரடி ஸ்ட்ரீம்கள் மூலம் கிரகணத்தை காணலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“