முழு சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு கடந்து சென்று சூரியனின் ஒளியை முழுமையாக மறைப்பது ஆகும். பகுதி சூரிய கிரகணம் என்பது சூரியனின் ஒளியை நிலவு பகுதியளவு மறைக்கும். இது ஒரு அற்புத வானியல் நிகழ்வு ஆகும்.
Advertisment
இந்நிலையில் உலகமே எதிர்பார்க்கும் அரிய முழு சூரிய கிரகண நிகழ்வு இன்று (ஏப்ரல் 8) நிகழ உள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த அரிய நிகழ்வை இந்திய நேரப்படி ஏப்ரல் 8 இரவு 9.13 மணியில் இருந்து மறுநாள் ஏப்ரல் 9 அதிகாலை 2.22 மணி வரை காண முடியும். முழு சூரிய கிரகணம் 10.08 மணியளவில் நிகழும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
கிரகணம் எவ்வளவு நேரம் நீடிக்கும்?
2024-ம் ஆண்டின் முழு சூரிய கிரகணம் ஏப்ரல் 8 ஆம் தேதி நிகழும். மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா வானின் இடையே 185 கிலோமீட்டர் நீளத்திற்கு முழு சூரிய கிரகணம் தெரியும். அதாவது வானில் முழுமையாக இருள் சூலும் ( Totality) நிகழ்வு இங்கு மட்டுமே நிகழும். அமெரிக்காவில் உள்ள 18 மாநிலங்களில் இதைப் பார்க்க முடியும். இருப்பினும், இந்தியாவிலோ ஆசிய நாடுகளிலோ இந்த சூரிய கிரகணத்தை காண முடியாது.
நாசாவின் கூற்றுப்படி, சூரிய கிரகணத்தின் உச்ச நிகழ்வு (Totality) 4 நிமிடங்கள் 27 வினாடிகள் வரை தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
முழு சூரிய கிரகண நிகழ்வை நாசா லைவ் ஸ்ட்ரீமிங்கில் வழங்குகிறது. இந்திய நேரப்படி ஏப்ரல் 8-ம் தேதி இரவு 10:30 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி அதிகாலை 1:30 மணி வரை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“