மீண்டும் மாற்றப்பட்ட கேபிள் டிவி விதிமுறைகள்… உங்கள் பில் கட்டணம் குறைய வாய்ப்புகள் உண்டா?

TRAI made new DTH and Cable TV regulation amendments : ஒரு வருடத்தினை கடந்த பிறகும் மீண்டும் ட்ராய் அமைப்பு கேபிள் டிவி மற்றும் டி.டி.எச் திட்டங்களில் பல்வேறு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் மற்றும் ப்ராட்காஸ்ட்டர்கள் என இருவருமே மகிழ்ச்சி அடையும் வண்ணம் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த மற்றங்கள் கொண்டு வரப்பட்ட உடனே பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான விமர்சனங்களும், டி.வி. பார்க்க கூட அதிக விலை தர வேண்டுமா […]

TRAI made new DTH and Cable TV regulation amendments
TRAI made new DTH and Cable TV regulation amendments

TRAI made new DTH and Cable TV regulation amendments : ஒரு வருடத்தினை கடந்த பிறகும் மீண்டும் ட்ராய் அமைப்பு கேபிள் டிவி மற்றும் டி.டி.எச் திட்டங்களில் பல்வேறு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் மற்றும் ப்ராட்காஸ்ட்டர்கள் என இருவருமே மகிழ்ச்சி அடையும் வண்ணம் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த மற்றங்கள் கொண்டு வரப்பட்ட உடனே பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான விமர்சனங்களும், டி.வி. பார்க்க கூட அதிக விலை தர வேண்டுமா என்ற கேள்விகளும் உருவானது. இந்த விமர்சனங்களை கொண்டு தற்போது மாற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய மாற்றங்கள்

என்.சி.எஃப். கட்டணம் ரூ. 130 என்பதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. ஆனால் 150 இலவச சேனல்களுக்கு பதிலாக தற்போது 200 சேனல்களை இந்த கட்டணத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

அதே போன்று நெடுநாள் திட்டங்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது ட்ராய்.

ப்ராட்காஸ்டர் சேனல்களுக்கான பேக்குகளில் ரூ. 12க்கு அதிகமான விலையுள்ள சேன்லகளை இணைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி வரிகள் உட்பட இனி நீங்கள் ரூ.160 ரூபாய் மட்டுமே செலுத்தி 200 சேனல்களை பார்க்க இயலும். கூடுதல் சேனல்களை பெற நீங்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

ப்ரோட்காஸ்டர் சேனல்களின் கட்டணங்களை மாற்ற ஏற்கனவே அந்நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃப்ரீ டூ ஏர் சேனல்களை மட்டும் பார்க்க விரும்பினால் உங்களின் மாதாந்திர பில் கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் ப்ரோட்காஸ்டர் பொக்கெட் சேனல்களை நீங்கள் பார்க்க விரும்பினால் இப்போது நீங்கள் செலுத்திக் கொண்டிருக்கும் கட்டணங்களைக் காட்டிலும் அதிமகாக பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இத்தனை சேனல்களுக்கு பதிலாக நெட்ஃப்ளிக்ஸ் அல்லது ஹாட்ஸ்டார் போன்ற ஓ.டி.டிகளை தேர்வு செய்யலாம்.

மேலும் படிக்க : திணற திணற கொண்டாடப்பட்ட புத்தாண்டு… தலை சுற்றும் தகவலை வெளியிட்ட வாட்ஸ்ஆப்!

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trai made new dth and cable tv regulation amendments

Next Story
திணற திணற கொண்டாடப்பட்ட புத்தாண்டு… தலை சுற்றும் தகவலை வெளியிட்ட வாட்ஸ்ஆப்!whatsapp back online, whatsapp working again, வாட்ஸ் அப், புகைப்படம் வீடியோ அனுப்புவதில் சிக்கல், வாட்ஸ் அப்பில் சிக்கல், whatsapp down, whatsapp not working, whatsapp out, whatsapp photo send fail, whatsapp problem
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com