/tamil-ie/media/media_files/uploads/2017/12/a22.jpg)
Airtel Prepaid Data Plans
Trai New Cable TV Rules Airtel Digital TV removes NCF on long term packs : வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்திருக்கிறது ஏர்டெல் டிஜிட்டல் டிவி. ட்ராய் அறிவித்த புதிய கேபிள் டிவி சட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் எந்த தொலைக்காட்சி சேனல்களை பார்க்க விரும்பினாலும் அடிப்படைக் கட்டணமாக என்.சி.எஃப் எனும் நெட்வொர்க் கெப்பாசிட்டி கட்டணத்தைக் கட்ட வேண்டும்.
Trai New Cable TV Rules Airtel Digital TV removes NCF
சமீபத்தில் டாட்டா ஸ்கை, டிஷ் டிவி இந்த கட்டணத்தை நீக்கி அறிவித்தது. இந்நிலையில் லாங் டெர்ம் சந்தாக்களான மூன்று மாத, 6 மாத, 12 மாத சந்தாக்கள் என அனைத்திலும் 130 ரூபாய் என்.சி.எஃப். மற்றும் 18% ஜி.எஸ்.டி என அனைத்தையும் நீக்கி அறிவித்துள்ளது.
சில இடங்களில், ரீஜினல் வாரியாகவும் இந்த சலுகைகளை மை ஏர்டெல் மொபைல் அப்ளிகேசன் வழியாக பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் ஆந்திரபிரதேசம் மெகா பேக்கை தேர்வு செய்தால் மூன்று மாதத்திற்கு ரூ.819 கட்டணமாக செலுத்தலாம். ஆறு மாதங்களுக்கு 1,638 மற்றும் வருடத்திற்கு 3,276 மட்டுமே. என்.சி.எஃப். கட்டணம் போக, மாதச் சந்தா வெறும் 273 மட்டுமே.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.