ட்ராய் கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகள்... இனி அதிக பணம் கட்ட வேண்டாம்!

Trai Tightens Cable TV Repair Rules : இதற்கு மேல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கட்டணமாக கேட்டல் நிச்சயம் தர வேண்டாம்

Telecom Regulatory Authority of India ( Trai ) Rules : கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சந்தாதாரர்களுக்கு கட்டண வசூல் உட்பட பல விஷயங்களில் புதிய விதிமுறைகளை வகித்துள்ளது ட்ராய் நிறுவனம்.

இருப்பினும், நிர்ணயிக்கப்பட்டுள்ள இறுதி காலக்கேடு மார்ச் 31ம் தேதிக்குள், வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் அனைத்து புகார்களையும் சரி செய்யும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

Trai Cable TV Repair Rules : ட்ராய் புதிய விதிமுறைகள்

அதாவது தாமதமாக அளிக்கப்படும் இணைப்புகள், தவிர்க்கப்பட்ட சேனல்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சேவை உள்ளிட்ட புகார்களை சீர் செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் மக்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தி வருகின்றனர்.

தவறுதலான டிவி இணைப்புக்கு ட்ராய் விதிமுறை

வாடிக்கையாளர்கள் தங்களின் புகார்களை பதிவு செய்யவும் குறைகளை தீர்த்துக்கொள்ளவும் ஒரு கால் செண்டர் தொடங்கியுள்ளது ட்ராய். அதற்கான இலவச உதவி எண்ணை சமீபத்தில் டுவீட் செய்தது ட்ராய் அமைப்பு. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் புகார்களை பதிவு செய்யலாம்.

அப்படி ஒரு வேளை நீங்கள் புகார் அளித்து 72 மணி நேரமாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்க்கொள்ளப்படவில்லை என்றால், வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. கேபிள் டிவி ஆப்பரேட்டரை மாற்றம் செய்யும்போது பல இன்னல்களை வாடிக்கையாளர்கள் சந்திக்க நேரிடும். அதற்காகத்தான் இத்தகைய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.

இணைப்பு கட்டணம்:

உங்கள் வீடுகளில் புதிய இணைப்பு கொடுப்பதற்கும், ட்ராய் நிறுவனம் கட்டணங்களை வடிவமைத்திருக்கிறது. அந்த வகையில், இணைப்பினை ரிப்பேர் செய்வதற்கு ரூ. 200 வசூலிக்கப்படும். அதை தவிர ஸ்மார்ட் கார்டு மாற்ற 300 ரூபாயும், இன்ஸ்டலேஷன் மற்றும் ஆக்டிவேஷனுக்கு 500 ரூபாயும் கட்டணங்களாக வசுலிக்கப்படும்.

முன்னதாக இன்ஸ்டலேஷன் மற்றும் ஆக்டிவேஷனுக்கு 1200 ரூபாயை வசூலித்து வந்தனர். அதனை தற்போது குறைத்து இரண்டாக பிரித்திருக்கின்றனர். இன்ஸ்டலேஷனுக்கு 350 ரூபாயும், ஆக்டிவேஷனுக்கு 150 ரூபாயும் நிர்ணயிருத்துள்ளனர். இதுவே 500 ரூபாயாக பெறப்படுகிறது. இதற்கு மேல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கட்டணமாக கேட்டல் நிச்சயம் தர வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது ட்ராய்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close