தேவையில்லாத அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வருவதை தடுக்க உதவும் iOS 12 இயங்குதளம்

ஆப்பிளையே அடிபணிய வைத்த ட்ராய்

ஆப்பிள் இயங்குதளமான ஐஓஎஸ் 12, இனி வரும் காலங்களில் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தியினை தடுத்து நிறுத்தும் படி அமைக்கப்படும் என்று கூறியுள்ளது.

இந்த அமைப்பு முறை ஏற்கனவே ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் நடைமுறையில் இருக்கிறது.

டிஎண்டி (டு நாட் டிஸ்டர்ப்) என்ற செயலியினை பயன்படுத்தினால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. ஆனால் தங்களின் வாடிக்கையாளர்களின் தனியுரிமை திருடப்படும் என்று கருதி இதனை செய்ய இயலாது என்று மறுத்துவிட்டது ஆப்பிள் இந்தியா.

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சம் மற்றும் ட்ராய் அமைப்பு “நெட்வொர்க் புரோவைடர்களிடம், இனி டு நாட் டிஸ்டர்ப் சேவையை நீங்கள் செய்ய வேண்டாம் என்றும், அது போனை உருவாக்கும் கம்பெனியின் செயல் என்றும் கூறியுள்ளது. மேலும் ஆறு மாத கெடுவிற்குள் இது தொடர்பான பிரச்சனைகளுக்கு முடிவினை தர வேண்டும் என்று கூறியது ட்ராய் அமைப்பு.

இந்த ரெகுலேசனை கட்டமைத்தது ட்ராய் அமைப்பு என்றாலும், ட்ராய்க்கான அங்கீகாரம் டெலிகாம் ஆப்ரேட்டர்களின் செயல்களை ஒழுங்கு செய்வது மற்றும் அவர்களுக்கு லைசன்ஸ் வழங்குவது என்ற வகையில் மட்டுமே இருக்கிறது.

மேலும் இந்த ரெகுலேசன் மூலமாக லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் தனியுரிமைகள் பாதிக்கப்படும் என்றும் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close