ராக்கெட் வேகத்தில் பறக்கும் ட்ரையம்ப் ராக்கெட் 3… இந்தியாவில் அடுத்த ஆண்டு வெளியீடு!

Triumph Rocket 3 Fuel Tank : ஆர். வேரியண்ட் 18 லிட்டர் எரிபொருள் கொள்ளளவை கொண்டுள்ளது. ஜி.டி. வேரியண்ட் 19 லிட்டர் எரிபொருள் கொள்ளளவை கொண்டுள்ளது. 

Triumph Rocket 3 bike engine, power, torque, specifications, price
Triumph Rocket 3 bike engine, power, torque, specifications, price

பெயர் : ட்ரையம்ப் நிறுவனத்தின் ராக்கெட் 3

எஞ்சின் : 2458சி.சி.  இன் லைன் த்ரீ சிலிண்டர் லிக்விக் கூல்ட் எஞ்சின்

குதிரைத் திறன் : 167 பி.எஸ்.

ஆர்.பி.எம் : 6000rpm

டார்க் : 221Nm (4000 rpm-ன் போது)

Triumph Rocket 3 bike engine, power, torque, specifications, price : இதற்கு முன்பு வெளியான ட்ரையம்பின் ராக்கெட் அதிக எடை கொண்டது. ஓட்டிச் செல்வதற்காகவே தனியாக உண்ண வேண்டும். வழியில் எங்காவது நின்றுவிட்டாலோ நம்முடைய நிலை அதோ கதி தான். ஆனால் அந்த பைக்கைக் காட்டிலும்  11% அதிக சக்தி வாய்ந்த, இலகுவான பைக் ராக்கெட் 3.

கடந்த முறை வெளியான பைக்கின் எடையை விட சற்று குறைவான எடையுடன் இதனை தயாரிக்க வேண்டும் என்று அதிக சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளது ட்ரைம்ப் நிறுவனம்.  ஷாஃப்ட், ஆயில் டேங்க், மற்றும் க்ராங்க் கேஸ் ஆகியவற்றின் வடிவமைப்பில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்து அதில் மட்டும் மொத்தம் 18.5 கிலோ வரை இதன் எடை குறைக்கப்பட்டுள்ளது.  6- ஸ்பீட் கியர் பாக்ஸ் – ஹெலிக்கல் கட் கியர்களாக வெளிவருவதால் மிகவும் இலகுவாக வண்டி ஓட்ட உதவும்.

Triumph Rocket 3 bike engine, power, torque, specifications, price
ராக்கெட் 3-ன் காக்பிட்

 Triumph Rocket 3 bike engine, power, torque, specifications, price

இந்த வருடத்தின் நவம்பர் மாதத்தில் ராக்கெட் 3 ஆர் மற்றும் ராக்கெட் 3 ஜிடி வெளியாக உள்ளது. இந்தியாவில் அடுத்த வருடம் இந்த பைக் விற்பனைக்கு வர உள்ளது. 20 லட்சம் முதல் 22 லட்சம் வரையில் இதன் விலை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  எல்.இ.டி லைட்கள் மற்றும் டி.எஃப்.டி கன்சோல்கள் ஆகியவை இதில் பொறுத்தப்பட்டுள்ளது.

ப்ளூடூத் மூலமாக உங்களின் பர்சனல் எலெக்ட்ரானிக் டிவைஸ்களையும் நீங்கள் இந்த பைக்கின் கண்ட்ரோல் வழியாக இயக்கலாம்.  ஆர். வேரியண்ட் 18 லிட்டர் எரிபொருள் கொள்ளளவை கொண்டுள்ளது. ஜி.டி. வேரியண்ட் 19 லிட்டர் எரிபொருள் கொள்ளளவை கொண்டுள்ளது.

மேலும் படிக்க : பெயருக்கு ஏற்றவாறே வடிவமைப்பைப் பெற்ற கர்ட்டிஸீன் ‘சைக்’ பைக்… விலையோ ரூ. 20 லட்சம்!

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Triumph rocket 3 bike engine power torque specifications price and more

Next Story
விவோவின் ஸ்டைலான ஸ்மார்ட்போன் 7ம் தேதி இந்தியாவில் அறிமுகம்!Vivo S1 Smartphone specifications, Vivo S1 Smartphone specifications, price, launch, availability, pre-order
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com