கால் ஐடெண்டிஃவிக்கேஷன் தளமான ட்ரூகாலர் மீண்டும் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களுக்கு கால் ரெக்கார்டிங் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ட்ரூகாலர் பிரீமியம் சந்தாதாரர்கள் இதை வழங்குகிறது.
பிரீமியம் கனெக்ட், அசிஸ்டண்ட் அல்லது பிரீமியம் குடும்பத் திட்டம் கொண்ட சந்தாதாரர்களுக்கு இந்த அம்சத்தை வழங்குகிறது. இருப்பினும் இந்த அம்சம் அமெரிக்கா போன்ற குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ட்ரூகாலரை டீஃவால்ட் காலிங் ஆப்-ஆக வைத்திருக்கும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அழைப்புகள் வரும் போது நேரடியாக கால் ரெக்கார்டிங் செய்யப்படும்.
ஆப்பிளில் கால் ரெக்கார்டிங் கிடையாது
ஆண்ட்ராய்டு போலல்லாமல், ஆப்பிள் போனில் எவ்விதமான கால் ரெக்கார்டிங் அம்சமும் கிடையாது. ட்ரூகாலர் மட்டுமே அதற்கு தீர்வாகும். பயனர்கள் ட்ரூகாலர் ஆப் மூலம் ஃபோன் எண்ணை டயல் செய்து, ரெக்கார்டிங்கைத் தொடங்க உங்களுடையது மற்றும் பேசக் கூடிய நபர்களின் எண்ணை இணைக்க வேண்டும். பயனரின் தனியுரிமையை உறுதிப்படுத்த அழைப்பில் உள்ள மற்ற நபருக்கு கால் ரெக்கார்டிங் செய்யும் போது பீப் சப்தம் கேட்கும். இதன் மூலம் கால் ரெக்கார்டிங் செய்யப்படுகிறது என்பதை இருவரும் அறிந்து கொள்ள முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“