பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து 'Sri TT Devasthanams' என்ற பெயரில் புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். பல்வேறு ஊர்கள், மாநிலங்களிலிருந்து பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில் தற்போது மேம்படுத்தப்பட்ட புதிய மொபைல் செயலி டி.டி.தேவஸ்தானம் மூலம் பக்தர்கள் தரிசன டிக்கெட், தங்குமிடம், ஆர்ஜித சேவைகளை ஆகியவைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கெனவே நடைமுறையில் இருந்த கோவிந்தா செயலி மேம்படுத்தப்பட்டு புதிய செயலிஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருமலை தொடர்பான அனைத்து தகவல்களையும் புதிய செயலி மூலம் பக்தர்கள் அறிய முடியும்.
செயலியை அறிமுகப்படுத்தி வைத்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி கூறுகையில், "இது யூனிவர்ஸல் செயலியாகும். பக்தர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தரிசன டிக்கெட் மற்றும் பிற சேவைகளை அறிந்து புக் செய்து கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/