Advertisment

ஜியோ சினிமாவில் ஐ.பி.எல்: டிராய்-யை அணுகும் ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனம் ஒரு சேவை-ஒரே கட்டண முறைக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை அணுக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Stock Market Today 11 Januvary 2023

பார்தி ஏர்டெல்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை ஜியோ சினிமாவில் இலவசமாக ஒளிபரப்புகிறது. இது தான் தற்போது பார்தி ஏர்டெல் நிறுவனம் டிராய்-யை அணுக தூண்டி உள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனம் ஒரு சேவை-ஒரே கட்டண முறை தொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை (டிராய்) அணுக உள்ளது. ஏர்டெல், டிடிஎச் மற்றும் கேபிள் டிவி சேனல்களிலும் கிடைக்கும் பட்சத்தில், டெலிகாம் ஆபரேட்டர்கள் தங்கள் செயலிகளில் இதன் உள்ளடக்கத்திற்கு மாறுபட்ட விலையை நிர்ணயம் செய்வதைத் தடைசெய்யும் ஒழுங்குமுறையை நாடியுள்ளது.

Advertisment

ஐபிஎல் போட்டிகளுக்கான டிஜிட்டல் உரிமையை ஜியோ சினிமா பெற்றுள்ளது. அதே சமயம் ஒளிபரப்பு உரிமைகள் டிஸ்னி-ஸ்டாரிடம் உள்ளன.

போட்டிகளை ஜியோ சினிமாவில் இலவசமாகப் பார்க்க முடியும் என்றாலும், Trai இன் கட்டண உத்தரவின்படி சேனல் விலை 19 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் டிஸ்னி-ஸ்டார் இதை வழங்க முடியாது. அடிப்படை (பேஸிக்) கேபிள் டிவி பேக் பெற பயனர்கள் மாதம் ரூ.325 செலுத்த வேண்டும். இந்த பேக்குகளில் டிஸ்னி-ஸ்டார் இல்லை என்றால், அதைச் சேர்க்க கூடுதலாக ரூ.19 செலுத்த வேண்டும்.

ஏர்டெல் அடிப்படையில் டி.டி.ஹெ.ச் மற்றும் கேபிள் டி.வியில் கிடைக்கும் உள்ளடக்கத்தை ஒளிபரப்பத் தேர்வு செய்துள்ளது. ஆனால் ஏர்டெல் வேறுபட்ட கட்டண ஒழுங்குமுறையைப் பயன்படுத்த விரும்புகிறது. ஐபிஎல் போட்டிகளை கேபிள்/டிடிஎச் மற்றும் டெலிகாம் ஆபரேட்டர் மூலம் ஒரே விலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று கூறுகிறது.

ஏர்டெல் டிராய்க்கு எழுதி உள்ள கடிதத்தில், ஒழுங்குமுறை கட்டமைப்பானது, அடிப்படை தொழில்நுட்பத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து தளங்களிலும் ஒளிபரப்பு உள்ளடக்கத்தை வழங்குவதற்கான அனைத்து முறைகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். ஒரே மாதிரியான உள்ளடக்கம் அனைத்து தளங்களிலும் ஒரே விலையில் கிடைக்க வேண்டும். தொழில்நுட்பத்தைப் பொருட்படுத்தாமல் விலை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

அடிப்படை தொழில்நுட்பத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து தளங்களுக்கும் (டிஜிட்டல் இயங்குதளங்கள் உட்பட) ஒரே மாதிரியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அதில் கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jio Reliance Jio Trai Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment