Twitter asks Android users not to update their app : ட்விட்டர் தங்களின் லேட்டஸ் அப்டேட்டினை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. இந்த அப்டேட்டினை அப்டேட் செய்த உடன், இந்த செயலி முற்றிலுமாக க்ராஷ் ஆக துவங்கியுள்ளது. இதனை அறிந்த ட்விட்டர் நிறுவனம், இந்த க்ராஷ்க்கான காரணம் என்ன என்பதை விசாரணை செய்து வருகிறது. இந்த பிரச்சனை சரியாகும் வரை யாரும் ட்விட்டர் செயலியை அப்டேட் செய்ய வேண்டாம் என்று அந்நிறுவனம் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த பிரச்சனை சரி செய்யப்பட்ட பிறகு புதிய அப்டேட்கள் வெளியிடப்படும். அதுவரையில் ட்விட்டரை நீங்கள் அப்டேட் செய்ய வேண்டாம் என்று ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்களை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். புதிய அப்டேட் வெளியானவுடன் கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று எப்போதும் போல் செயலியை அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஆட்டோ அப்டேட்டில் இருந்து சில நாட்களுக்கு தப்பித்துக் கொண்டால் உங்களின் ட்விட்டர் கணக்கும் தப்பித்தது, அதற்கு நீங்கள் Google Play Store-> Settings panel-> Auto-Update Apps -> Don’t Auto-Update Apps என்பதை செலக்ட் செய்து தப்பித்துக் கொள்ளுங்கள்!