Twitter ceo jack dorseys : ட்விட்டர் சமூக வலைதளத்தின் சி.இ.ஓ ஜேக் டோர்சியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. ஜேக் டோர்சியின் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியது குறித்து ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.
தலைமை செயல் அதிகாரியான ஜேக் டோர்சியின் ட்விட்டர் அக்கவுண்ட் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும். இந்நிலையில் நேற்றைய தினம் இவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திடீரென இனவெறி கருத்துக்களும், ஹிட்லரின் நாசி ஜெர்மனிக்கு ஆதரவான கருத்துகளும் பதிவிடப்பட்டன. “ஹிட்லர் வாழ்க”, “ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு உள்ளது” என்பது உள்ளிட்ட ட்வீட்கள் பதிவிடப்பட்டன.
சில மணி நேரத்தில் இந்த பதிவுகள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின. ஜேக்கை பின் தொடருபவர்கள் இதுக் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்ப தொடங்கின. சிறிது நேரத்தில் அவரது கணக்கு மீட்கப்பட்டு அந்த ட்வீட்டுகள் நீக்கப்பட்டன. இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம், ஜேக் டோர்சியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தது.
இந்த விளக்கத்திற்கு பிறகு இணையவாசிகள் கோபமடைந்தனர். ”ட்விட்டர் சிஇஓ-வின் கணக்கையே பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத ட்விட்டர் நிறுவனத்தால், எங்கள் கணக்குகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்” என்ற கேள்விகள் ட்விட்டர் பயனாளிகளால் எழுப்பட்டது.
இதன பின்பு, இந்த கேள்விகளுக்கு ட்விட்டர் நிறுவனம் அறிக்கை மூலம் பதில் அளித்தது. அதில் “
,தங்களது சொந்த பாதுகாப்பு அமைப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை எனவும், ட்விட்டர் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்த மொபைல் எண் மூலமாக கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக” கூறியிருந்தது.