ட்விட்டரில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. பல துறை பிரபலங்கள், அரசியல், கிரிக்கெட், சினிமா எனப் பலர் ட்விட்டர் பயன்படுத்துகின்றனர். பொதுமக்களும் ட்விட்டர் பயன்படுத்துகின்றனர். அதிகாரப்பூர்வ தளமாக இருப்பதால் அரசியல் செய்திகள் உடனடியாக தெரிந்து கொள்ள முடிகிறது. பயன்படுத்துவதற்கும் எளிமையாக இருப்பதால் பலர் இதை பயன்படுத்துகின்றனர்.
பிரபலங்களை பின்தொடர்ந்து அவர்கள் பற்றிய அப்டேட் தெரிந்து கொள்கின்றனர். ட்விட்டர் நிறுவனம் அண்மையில் ட்விட் எடிட் ஆப்ஷன் கொண்டு வர உள்ளதாக அப்டேட் கொடுத்தது. அந்தவகையில் தற்போது சேர் பட்டனில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
அதாவது சேர் பட்டன் (Share button) வாட்ஸ்அப் ஐகான் (WhatsApp icon) போல் மாற்றியுள்ளது. முன்பு ஏரோ (arrow) சிம்பள் போன்று இருந்தது தற்போது வாட்ஸ்அப் ஐகான் போல் மாற்றப்பட்டுள்ளது. நீங்கள் நினைக்கலாம் குறிப்பிட்ட ட்விட்-யை வாட்ஸ்அப்பில் எளிமையாக பகிரலாம். வாட்ஸ்அப் (contact)-ற்கு எளிமையாக பகிர இந்த ஐகான் கொண்டுவரப்பட்டுள்ளது என்று நினைப்பீர்கள். ஆனால் அது தான் இல்லை.
சேர் பட்டன் வாட்ஸ்அப் ஐகான் போல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது, ஆனால் அதன் பயன்பாடு முன்பு இருந்த சேர் பட்டன் பயன்பாடு தான். வாட்ஸ்அப் shortcut மெனு கிடையாது. எப்போதும் போல் இந்த புது ஐகான் கொடுத்தால், எவ்வாறு ட்விட் சேர் செய்ய வேண்டும் (வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எஸ்எம்எஸ்) எனக் கேட்கும். இதை செலக்ட் செய்து சேட் செய்யலாம்.
ஆனால் நேரடியாக வாட்ஸ்அப் சேர் அம்சம் கிடையாது. தற்போது இந்த புது மாற்றம் சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் பயன்பாட்டில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த புது மாற்றம் அனைவரது பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்படுமா என்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. பயனர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படக் கூடாது என்று கருதப்படுகிறது. இருப்பினும் இது தற்போது குறிப்பிட்ட பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“