New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/Twitter-Feature-.jpg)
பயனர்கள் நீண்ட நாட்களாக ட்விட்டரில் எதிர்பார்த்த எடிட் ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆனால் அதிலும் பல ட்விஸ்ட் உள்ளன.
ட்விட்டர் பயனர்கள் நீண்ட நாட்காக எதிர்பார்க்கப்பட்ட'ட்விட் எடிட் ஆப்ஷன்'அறிமுகப்படுத்தப்பட உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் இந்த ஆப்ஷன் இருந்தபோதிலும் ட்விட்டரில் இந்த ஆப்ஷன் கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆப்ஷன் தற்போது உள்நாட்டில் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், வரும் வாரங்களில் முதல் கட்டமாக புளூ டிக் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புளூ டிக் பயனர்களாக இருந்தாலும் அனைத்து நாடுகளுக்கும் தற்போது அறிமுகப்படுத்தப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டும் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் சில எழுத்து பிழையுடன் ட்விட் செய்தாலும் அதனை திருத்த முடியாது. மீண்டும் புதிதாகத் தான் ட்விட் செய்ய வேண்டும். இது பயனர்களுக்கு பெரும் சிரமமாக இருப்பதால், எடிட் ஆப்ஷன் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இப்போது சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சோதனை மூலம் ஆப்ஷனில் உள்ள சிரமம், மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள், இந்த வசதி தவறாக பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்வர்.
பல ட்விஸ்ட்கள்
ட்விட் பதிவிடப்பட்ட 30 நிமிடத்திற்கு மட்டுமே ‘Edit Tweet’ (எடிட் ட்விட்) ஆப்ஷன் பயன்படுத்த முடியும். இந்த 30 நிமிடத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் ட்விட் எடிட் செய்து கொள்ளலாம்.
அதேசமயம், திருத்தப்பட்ட ட்வீட்கள் பிரத்யேக ஐகான், ட்விட் திருத்தப்பட்ட நேரம் மற்றும் லேபிளுடன் காண்பிக்கப்படும். அதாவது முன்பு பதிவிட்ட ஒரிஜினல் ட்விட் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது பயனர்களுக்கு தெரிய வரும். பயனர் அந்த லேபிளை கிளிக் செய்தால் ஒரிஜினல் ட்விட் என்ன என்பதும், அதில் என்ன மாற்றப்பட்டுள்ளது ( எழுத்து பிழை, வார்த்தை, புதிய டேக்) என அனைத்தும் தெரியவரும்.
இதுகுறித்து ட்விட்டர் கூறுகையில், " Time limit and version history முக்கிய பங்கு வகிக்கும். ட்விட் உரையாடலின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க உதவும். யார் என்ன பதிவிட்டுள்ளார்கள் என்பதும் அனைவரும் தெரிந்து கொள்ளுப்டி பொதுதளத்தில் இருக்கும்" என தெரிவித்துள்ளது.
இந்த வசதி முதலில் புளூ டிக் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.