scorecardresearch

‘இனி எச்சரிக்கை இல்லை.. நிரந்தர தடை’ : எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி என்ன?

ட்விட்டரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுபவர்களின் கணக்குகள் எச்சரிக்கையின்றி நிரந்தரமாக நீக்கப்படும் என சி.இ.ஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

‘இனி எச்சரிக்கை இல்லை.. நிரந்தர தடை’ : எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி என்ன?

உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் பிரபர சமூகவலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். ட்விட்டர் உரிமையாளரான முதல் நாளே எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் உள்பட 3 மூத்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அதோடு ட்விட்டரில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

ட்விட்டர், உலக முழுவதும் பயன்படுத்தும் பிரபல சமூகவலைதளமாகும். பல்வேறு நாட்டு தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் முதல் உள்ளூர் மக்கள் வரை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரபலங்களின் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண ‘ப்ளூ டிக்’ வசதி பயன்படுத்தப்படுகிறது. இந்த வசதிக்கு மாதம் 8 அமெரிக்க டாலர் (ரூ. 661.24) கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து அதை அமல்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில் தற்போது, ட்விட்டரில் போலி கணக்குகள் Parody Account (பகடி அக்கவுண்ட்) என குறிப்பிடாமல், ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுபவர்களின் கணக்குகள் எச்சரிக்கையின்றி நிரந்தரமாக நீக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், “Parody Account (பகடி கணக்கு) என தெளிவாக குறிப்பிடாமல் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் அந்த கணக்கு எவ்வித எச்சரிக்கையின்றி நிரந்தரமாக நீக்கப்படும்.

கடந்த காலங்களில் கணக்கு நீக்கப்படுவதற்கு முன்பாக எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால் தற்போது அடையாள சரிபார்ப்பு நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு வருவதால், எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படாது” எனக் கூறியுள்ளார்.

Parody Account என்றால் என்ன?

Parody Account கிட்டதிட்ட Fan account என்றே கூறலாம். சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் எனப் பல துறை சேர்ந்த நட்சத்திரங்களின் பெயரிலில் கணக்கு தொடங்கப்பட்டு பிரபலங்கள் பற்றின அப்டேட் எனப் பல அதில் பகிரப்படும். இந்தநிலையில் அந்த கணக்கில் “Parody” Account எனத் தெளிவாக குறிப்பிடாமல் இருந்தால் எச்சரிக்கையின்றி நிரந்தரமாக நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Twitter impersonators will be suspended permanently musk says

Best of Express