Twitter is making changes to offer improved video quality Tamil News : ட்விட்டர் இப்போது பயனர்களைச் சிறந்த தரத்தில் வீடியோக்களை பார்க்க அனுமதிக்கும்.
ட்விட்டரில் தரம் வாய்ந்த சிறந்த வீடியோ இல்லை எனப் பல பயனர்களால் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இதனை சரிசெய்து இனி தரம் வாய்ந்த வீடியோக்களை பார்க்க முடியும் என ட்விட்டர் அதன் ஆதரவு கணக்கிலிருந்து ஒரு ட்வீட் மூலம் உறுதிசெய்துள்ளது.
"வீடியோ தரத்தை மேம்படுத்த நாங்கள் புதுப்பிப்புகளைச் செய்துள்ளோம். இன்று முதல், நீங்கள் ட்விட்டரில் பதிவேற்றும் வீடியோக்கள், சிறந்த பார்வை அனுபவத்திற்காக குறைவான பிக்சலேட்டாகத் தோன்றும்" என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.
தி வெர்ஜ் அறிக்கையின்படி, ட்விட்டர் வீடியோக்களைப் பதிவேற்றும் போது அதன் வீடியோ பைப்லைனில் ஒரு முன்-செயலாக்க நடவடிக்கையை நீக்கியதாகக் கூறியுள்ளது. தரத்தை இழக்கப் பங்களிக்கும் வீடியோக்களை சிறிய பகுதிகளாகப் பிரிப்பதற்கான நடவடிக்கையை நீக்கியதாக நிறுவனம் கூறுகிறது. இந்த சேவையின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதற்காக ட்விட்டர், மற்ற அம்சங்கள் மற்றும் எலிமென்ட்டுகளில் செயல்படுகிறது.
டைம்லைன் தன்னை புதுப்பித்துக்கொள்வதால், இதன் விளைவாக ட்வீட்கள் மறைந்துவிடும். அடுத்த இரண்டு மாதங்களில் இந்த சிக்கலை சரிசெய்யப் புதுப்பிப்புகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக ட்விட்டர் கூறுகிறது. "இது ஒரு ஏமாற்றமளிக்கும் அனுபவம் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, நாங்கள் அதை மாற்றுவதற்காக வேலை செய்கிறோம்" என்று ட்விட்டர் இந்த பிரச்சனை தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ளது.
இரண்டு மாத காலக்கெடு என்றால், அந்தத் தீர்வு உடனடியாக அமையாமல் போகலாம். எனவே, ட்விட்டர் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு முன்பே நீங்கள் சில சிக்கலை எதிர்கொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil