ட்விட்டரின் புதிய அப்டேட்: டைரக்ட் மெசேஜ் அனுப்புதல்

நேரடியாக வியாபார நிறுவனங்களுடன் உரையாடல்களை குறுந்தகவல் மூலம் துவங்கிக் கொள்ளலாம்.

முக்கியமான சமூகவலைத்தளங்களில் ஒன்றாக பார்க்கப்படும் ட்விட்டர் வலைப்பக்கத்தில் நேரடியான மெசேஜ் அனுப்புவதற்கான புதிய அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது.

இன்றைய தொழில்நுட்ப உலகில், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் இளைஞர்களின் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.  இந்த செயலிகளை பயன்படுத்துவோர் நாளுக்கு நாள் புதிய புதிய அப்டேட்டுகளை எதிர் நோக்க ஆரம்பித்து விட்டனர். முன்பேல்லாம் ஒரு செயலியின் அப்டேட் வெர்ஷன் குறைந்தது மூன்று மாத இடைவெளியில் வந்துக் கொண்டிருந்தது. ஆனால்,இப்போது   வாரத்திற்கு ஒருமுறை ஒரு அப்டேட் வெர்ஷன் வருகிறது.

அந்த வகையில், தற்போது  ட்விட்டர் வலைப்பக்கத்தில் நேரடியாக மெசேஜ் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  டைரக்ட் மெசேஜ் டீப் லின்க் மற்றும் டைரக்ட் மெசேஜ் கார்டு என்று  இரண்டு புதிய அம்சங்களை யூசர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நேரடியாக வியாபார நிறுவனங்களுடன் உரையாடல்களை குறுந்தகவல் மூலம் துவங்கிக் கொள்ளலாம்.

வெல்கம் மெசேஜ்கள், குவிக் ரிப்ளை உள்ளிட்ட வசதிகளும் ட்விட்டர் வலைப்பக்கத்தில் அப்பேட் செய்யப்பட்டுள்ளன. ஏ.பி.ஐ. (API) மூலமாக, டைரக்ட் மெசேஜ்களை , டெவலப்பர்களுக்கு எளிமையாக வழங்கலாம். வியாபார நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் குறுந்தகவல் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு பதில் அனுப்ப அடாப்டிவ் ரேட் லிமிட்ஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதி மூலம், அவர்களுக்கு உங்களின் மெசேஜுக்கு தொடர்ந்து 5 முறை, அவர்களால்  பதில் அனுப்ப முடியும். அதன் பின்பு,  இது சாட்டிங் போல் மாறிவிடும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

×Close
×Close