லைவ் ஸ்ட்ரீமிற்காகவே வெளியாக இருக்கும் ட்விட்டரின் புதிய அப்டேட்

வரும் நாட்களில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் இந்த மாற்றம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Twitter New Camera Feature to mobile app :  இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்நாப்சாட் போன்ற அப்ளிகேசன்களுக்கு இணையாக ட்விட்டரும் புதிய சிறப்பம்சங்களை அப்ளிகேசனில் வெளியிட உள்ளது.

Twitter New Camera Feature

கேமரா சிறப்பம்சங்களை தங்களின் செயலியில் இணைக்க இருப்பதால் புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் லைவ் ஸ்ட்ரீம்கள் போன்ற பயன்பாடுகள் இனி மிக எளிமையாக்கப்படும்.  இந்த புதிய அப்ளிகேசன் தொடர்பாக ட்வீட் ஒன்றை ட்விட்டர் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கிள் கேப்சர் பட்டனுடன் வெளியாகும் இந்த சிறப்பம்சத்தின் மூலமாக சிங்கிள் டேப்பில் போட்டோ எடுக்க இயலும். மேலும் 2 நிமிடங்களுக்கு வீடியோ எடுக்க லாங் ப்ரஸ் தர வேண்டும். மேலும் முன்பக்க கேமரா ஆப்சனும் இதில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஸ்டோரீஸ் ஆப்சன் மட்டும் கிடையாது. வரும் நாட்களில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் இந்த மாற்றம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close