Advertisment

டெக்ஸ்டாப் வெர்சனில் அசத்தும் புதிய டுவிட்டர் டிசைன்

Twitter : சமூகவலைதளங்கள், பயனாளர்களை கவர்வதாகவும், பயன்படுத்த இலகுவாக இருக்கவும் அடிக்கடி அப்டேட்களை வழங்கி வருகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
twitter, update, social network, darkmode, டுவிட்டர், அப்டேட், சமூகவலைதளங்கள்

twitter, update, social network, darkmode, டுவிட்டர், அப்டேட், சமூகவலைதளங்கள்

சமூகவலைதளங்களில் முன்னணி இடத்தில் டுவிட்டர் இணையதளம் உள்ளது. சமூகவலைதளங்கள், பயனாளர்களை கவர்வதாகவும், பயன்படுத்த இலகுவாக இருக்கவும் அடிக்கடி அப்டேட்களை வழங்கி வருகின்றன. இந்நிலையில், டுவிட்டர் டெக்ஸ்டாப் வெர்சனுக்கு புதிய அப்டேட் வழங்கியுள்ளது. வடிவமைப்பை மாற்றியுள்ளதோடு மட்டுமல்லாது பல்வேறு சிறப்பம்சங்களையும் வழங்கியுள்ளது. முக்கிய டுவிட்களை, புக்மார்க் செய்துகொள்ளும் வசதி, கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க டார்க்மோட் வசதி, லைட்ஸ் அவுட் வசதி உள்ளிட்டவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. எக்ஸ்புளோரர் மூலம் டிரெண்டிங்கை எளிதாக அறியும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. கவர் போட்டோவில், நிறங்களை மாற்றும் வசதியும் புதிய அப்டேட்டில் தரப்பபட்டுள்ளது.

டுவிட்டரில் தேவையற்ற ரிப்ளையை பயனாளர்கள் லாக் செய்து கொள்ளலாம், அதேபோல் ரிப்ளையைய படிக்க விரும்புபவர்கள் அன்லாக் செய்து படிக்கும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.

பயனாளர்கள் மற்றும் பாலோயர்ஸ் என இருவருக்கும் சமவாய்ப்பை வழங்கும் விதமாக இது இருக்கும் என்று டுவிட்டர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சோதனை முயற்சி தான் என்றாலும், இதற்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து அதிகாரப்பூர்வமாக அப்டேட் செய்யப்படும் என்று டுவிட்டர் தெரிவித்துள்ளது.

Twitter
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment