ட்விட்டரில் மோடியின் ஃபலோவர்ஸ் எண்ணிக்கை போலியில்லை: ட்விட்டர் விளக்கம்!

ராகுல் காந்தி 67% போலி ஃபலோவர்ஸ், மோடி 61%, அமித்ஷா, சஷி தரூர் ள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்களில் போலி வாலோவர்ஸ் பெற்றிருப்பதாக தெரிவித்தது

இந்திய நாட்டின் பிரதமர் மோடியை, ட்விட்டர் பக்கத்தில், பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை உண்மையானது என்று ட்விட்டர் வலைப்பக்கம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இப்போது இருக்கும் அரசியல் தலைவர்கல் களத்தில் இருங்குவதை விட ட்விட்டரில் இறங்குவதே அதிகம். அதனால் தான் இன்றைய அரசியல் தலைவர்கள் ’ட்விட்டர் தலைவர்கள்’என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் மோடி, ராகுல் காந்தி மற்றும் பல்வேறு இதர அரசியல்வாதிகளை ட்விட்டரில் பின்தொடரும் எண்ணிக்கை போலியானது என்ற தகவல் வெளியாகியது.

சமீபத்தில் ட்விட்டர் ஆடிட் என்ற பெயரில் இணையத்தில் வெளியான அறிக்கை ஒன்றில இந்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அரசியல்வாதிகளை பின்தொடர்வோரில் பெரும்பாலானவை போலி கணக்குகள் என்ற தகவல் முற்றிலும் உண்மையில்லை என்றும், வாலோவர்ஸ் எண்ணிக்கையும் போலியில்லை என்று ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதுக்குறித்து விளக்கம் அளித்துள்ள ட்விட்டர் நிறுவனம், “ ட்விட்டர் ஆடிட் கருவியானது ட்விட்டருடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாத மூன்றாம் தரப்பு சேவையாகும். அவற்றில் வெளிவரும் எந்தவித தகவலும் உண்மையில்லை. அதுக் குறிப்பிட்டுள்ளது போல், ராகுல் காந்தி 67% போலி ஃபலோவர்ஸ், மோடி 61%, அமித்ஷா, சஷி தரூர் ள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்களில் போலி வாலோவர்ஸ் பெற்றிருப்பதாக தெரிவித்தது முற்றிலும் பொய்” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close