scorecardresearch

இன்ஸ்டா போல் இனி ட்விட்டரில்.. வீடியோ அம்சத்தில் புது அப்டேட்!

இன்ஸ்டாகிராமில் முழுத்திரை வீடியோ வருவது போல் ட்விட்டரிலும் முழுத்திரை வீடியோ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் போன் பயனர்களுக்கு இந்த வசதி முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்ஸ்டா போல் இனி ட்விட்டரில்.. வீடியோ அம்சத்தில் புது அப்டேட்!

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ முழுத்திரையில் வருவது போல் ட்விட்டர் வீடியோக்களும் முழுத்திரையில் பார்க்கும்படி ட்விட்டர் நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. முதற்கட்டமாக ஆப்பிள் போன் பயனர்களுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் போனில் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் இந்த வசதியை பெற முடியும்.

ட்விட்டர் நிறுவனம் இந்த வசதியை கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அறிவித்தது. வீடியோ மீது கிளிக் செய்தால் முழுத்திரை வீடியோவாக பார்க்கலாம். மீண்டும் கிளிக் செய்தால் சிறிய அளவில் பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ போல் நீள் வடிவில் (vertical video content)பார்க்கலாம்.

வீடியோ உடன் செய்தி பகிரும் ட்விட்டில் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம். feed பக்கத்தில் வருவது போல் scroll செய்து மற்ற ட்விட்களையும் பார்க்கலாம். எப்போதும் போல் லைக், ரீ ட்விட், பதில் கொடுக்கலாம். எஃக்பிளோர் (Explore) பக்கத்திலும் இதை பயன்படுத்தலாம்.

இது தவிர ட்விட்டர் நிறுவனம் பல புதிய அம்சங்களை சோதனை செய்து வருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல், ட்விட்டரிலும் வீடியோக்களுக்கு தனியாக ஒரு பக்கத்தை கொண்டு வர சோதனை மேற்கொள்ளப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Twitter rolling out instagram reels style vertical video experience to ios users

Best of Express