மேக் கணினிகளில் ட்விட்டர் டெஸ்க்டாப் அப்ளிகேஷன் சப்போர்ட் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் நீக்கப்பட்டுள்ளது. இதுக் குறித்த அறிவிப்பு அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியாகும் முன்பு வரை, வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உள்ள ட்விட்டர் செயலிக்கு 2 க்கும் மிக குறைவான மதிப்பெண்களை வழங்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் செயலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதுக்குறித்து அந்நிறுவனம் பதிவிட்டுள்ள ட்விட்டில், “பல்வேறு காரணங்களை முன்வைத்து, ட்விட்டர் சேவை வழங்கப்படும் அனைத்து தளங்களிலும் அதன் செயல்பாட்டை மேலும் அதிகரிக்க அதிகம் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளோம். எனவே, பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் மேக் கணினிகளுக்கான ட்விட்டர் செயலியை டவுன்லோடு செய்ய முடியாது. இதனால், வாடிக்கையாளர்கள் மேக் கணினிகளில் ட்விட்டர் சேவையை தொடர்ந்து பயன்படுத்த (Tweetdeck) போன்ற தனிப்பட்ட செயலியை பயன்படுத்திக் கொள்ளவும்” என்று தெரிவித்துள்ளது.
,
,
மேக் செயலியை அப்டேட் செய்வதில் ட்விட்டர் சரியான நுணுக்கங்களை கையாளுவதில்லை என்று குற்றச்சாட்டு பொதுவாகவே இருந்து வருகிறது . கடந்த 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மொமண்ட்ஸ் வசதி பல மாதங்கள் கழித்தே செயல்படுத்தப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.