டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை ரீடுவீட் செய்வதற்கு முன்பாக, அதை திறந்து பார்க்கும் வசதியை சோதனை செய்து வருவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேபோல், ஒரு பதிவையோ அல்லது ஆர்டிகலையோ ரீடுவிட் செய்வதற்கு முன்பாக, அதுதொடர்பான நமது சொந்த கருத்துகளையும் இணைத்து அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, டுவிட்டர் நிறுவம் வெளியிட்டுள்ள பதிவில், சமூகவலைதளத்தில், பொருள் மற்றும் அறிவுசார்ந்த விவாதங்களுக்கு தேவையான தகவல்கள் அதிகம் இடம்பெறவேண்டும் என்பதன் அடிப்படையிலும், பகிரும் பதிவுகளால், விவாதங்கள் வலுப்பெறவேண்டும், டுவிட் செய்யப்படுவதற்கு முன்பே, அது படிக்கப்பெற்றால், கருத்துகள் மேலும் பலருக்கு சென்றடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sharing an article can spark conversation, so you may want to read it before you Tweet it.
To help promote informed discussion, we're testing a new prompt on Android –– when you Retweet an article that you haven't opened on Twitter, we may ask if you'd like to open it first.— Twitter Support (@TwitterSupport) June 10, 2020
இந்த சோதனைமுயற்சி, தற்போதைய அளவில் ஆண்ட்ராய்ட் வெர்சனிலும் நடைபெற்றுள்ளது.
டுவிட்டரில், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களுக்கு அதிகளவில் பாலோயர்கள் உள்ள நிலையில், அவர்களால் அதிகளவில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக டுவிட்டர் மீது நீண்டநாளாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள டுவிட்டர் நிறுவனம், பொய்த்தகவல்கள் அடங்கிய பதிவை அவ்வப்போது நீக்கிவிட்டதாக தெரிவித்தும் வருகிறது.
சமீபத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதிவில், வன்முறைகளை தூண்டும் வகையிலான சொற்கள் இருந்ததாக கூறி, டுவிட்டர் நிறுவனம், அந்த பதிவுகளை நீக்கியிருந்தது. அதேபோல், பொய்த்தகவல்கள் போன்று இருந்தால், fact-check option மூலம், டுவிட்டர் பயனாளர்கள் சரிபார்க்கும் வசதியினையும் டுவிட்டர் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொய்ச்செய்திகள் மற்றும் ஒரிஜினல் இல்லாமல் கையாளப்பட்ட வீடியோக்கள் விவகாரத்தில், அதன் அபாயத்தன்மையை விளக்கும் வகையில், ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற குறியீடுகளை அந்தந்த பதிவுகளில் இடம்பெறச் செய்வதற்கான சோதனையும் நடைபெற்று வருவதாக டுவிட்டர் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.