ரீடுவீட் செய்வதற்கு முன்பே பதிவை படிக்கும் வசதி – அட்டகாச சோதனை முயற்சியில் டுவிட்டர்

Twitter new feature : பொய்த்தகவல்கள் போன்று இருந்தால், fact-check option மூலம், டுவிட்டர் பயனாளர்கள் சரிபார்க்கும் வசதியினையும் டுவிட்டர் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

By: Published: June 11, 2020, 1:09:58 PM

டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை ரீடுவீட் செய்வதற்கு முன்பாக, அதை திறந்து பார்க்கும் வசதியை சோதனை செய்து வருவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேபோல், ஒரு பதிவையோ அல்லது ஆர்டிகலையோ ரீடுவிட் செய்வதற்கு முன்பாக, அதுதொடர்பான நமது சொந்த கருத்துகளையும் இணைத்து அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, டுவிட்டர் நிறுவம் வெளியிட்டுள்ள பதிவில், சமூகவலைதளத்தில், பொருள் மற்றும் அறிவுசார்ந்த விவாதங்களுக்கு தேவையான தகவல்கள் அதிகம் இடம்பெறவேண்டும் என்பதன் அடிப்படையிலும், பகிரும் பதிவுகளால், விவாதங்கள் வலுப்பெறவேண்டும், டுவிட் செய்யப்படுவதற்கு முன்பே, அது படிக்கப்பெற்றால், கருத்துகள் மேலும் பலருக்கு சென்றடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனைமுயற்சி, தற்போதைய அளவில் ஆண்ட்ராய்ட் வெர்சனிலும் நடைபெற்றுள்ளது.

டுவிட்டரில், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களுக்கு அதிகளவில் பாலோயர்கள் உள்ள நிலையில், அவர்களால் அதிகளவில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக டுவிட்டர் மீது நீண்டநாளாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள டுவிட்டர் நிறுவனம், பொய்த்தகவல்கள் அடங்கிய பதிவை அவ்வப்போது நீக்கிவிட்டதாக தெரிவித்தும் வருகிறது.

சமீபத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதிவில், வன்முறைகளை தூண்டும் வகையிலான சொற்கள் இருந்ததாக கூறி, டுவிட்டர் நிறுவனம், அந்த பதிவுகளை நீக்கியிருந்தது. அதேபோல், பொய்த்தகவல்கள் போன்று இருந்தால், fact-check option மூலம், டுவிட்டர் பயனாளர்கள் சரிபார்க்கும் வசதியினையும் டுவிட்டர் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொய்ச்செய்திகள் மற்றும் ஒரிஜினல் இல்லாமல் கையாளப்பட்ட வீடியோக்கள் விவகாரத்தில், அதன் அபாயத்தன்மையை விளக்கும் வகையில், ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற குறியீடுகளை அந்தந்த பதிவுகளில் இடம்பெறச் செய்வதற்கான சோதனையும் நடைபெற்று வருவதாக டுவிட்டர் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Twitter testing new feature to prompt users to open articles before retweeting

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Technology News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Twitter social network informed discussion twitter new feature retweet

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X