Twitter spaces to get new replay and live chat features Tamil News : ட்விட்டர் ஸ்பேஸின் ஒரு அறிக்கையின்படி நேரடி சாட்டில் பங்கேற்பாளர்களுக்கான ரீப்ளே மற்றும் வழிமுறைகள் உள்ளிட்ட புதிய அம்சங்களை சேர்க்க உள்ளது. இந்த புதிய அம்சங்கள் இன்னும் வளர்ச்சியில் இருக்கும் நிலையில், அவை டெவலப்பர் மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியாளர் நிமா ஓவ்ஜியால் ட்விட்டரின் குறியீட்டில் கண்டறியப்பட்டது.
இந்தத் தளம் நான்கு புதிய விருப்பங்களைச் சேர்க்கும் என்பதைக் குறியீடு குறிக்கிறது. இது அறையில் அதிக கட்டுப்பாட்டைக் கொடுக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் ட்விட்டரில் ஒரு பதிவின் மூலம் அதை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த அறிக்கையை நம்புவதற்கு, ட்விட்டர் ஸ்பேஸ் பயனர்களுக்கு குறிப்பிட்ட "விதிமுறைகளை" வழங்க விரும்புகிறது. விதிமுறைகள் இப்போது தெளிவாக இல்லை என்றாலும், அவை ஸ்பேஸில் என்ன செய்யலாம் மற்றும் செய்ய முடியாது என்பதை வரையறுக்க ஹோஸ்ட்களுக்கான ஒரு பகுதியை சேர்க்கும்.
கூடுதலாக, "பிளாக்" ஆப்ஷனையும் ஸ்பேஸ் சேர்க்கவுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு நேரடி உரையாடலைக் கட்டுப்படுத்த ட்விட்டர் உங்களை அனுமதிக்கும் என்பதைக் குறிக்கலாம்.
மேலும், Spaces-க்கான "ரீப்ளே" விருப்பம் தொடர்பான குறியீடுகளும் கண்டறியப்பட்டிருக்கின்றன. இப்போதைக்கு, நீங்கள் Spaces-ல் சேர ஒரே வழி, நேரடி உரையாடல் மற்றும் அதற்கு மேல் பயனர்கள் அதை மீண்டும் கேட்க முடியாது.
ரீப்ளே விருப்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிறுவனம் அதை மாற்ற விரும்புவதாக குறியீடுகள் தெரிவிக்கலாம். இந்த அம்சம் விருப்ப சலுகையாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இயக்கப்பட்டவுடன், கால நேரத்தையும் அந்த சாட்டில் பங்கேற்ற பயனர்களையும் பார்க்க முடியும்.
இது ட்விட்டர் கோடிலிருந்து கண்டறியப்பட்டவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இந்த அம்சங்கள் எப்போது மக்களுக்கு வெளிவரும் என்பது இன்னும் தெரியவில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil