ட்விட்டர் நிறுவனம் பயனர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது பயனர்கள் ட்வீட்களைப் படிக்கும்போது தானாகவே மறைந்துவிடும் நீண்டகால பிரச்சினை சரிசெய்துள்ளது.
மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் இனி புதிய ட்வீட்களுடன் டைம்லைனை புதுப்பிக்காது. புதிய ட்வீட்கள் எப்போது திரையில் தோன்ற வேண்டும் என்பதை இனி பயனர்கள் முடிவு செய்துகொள்ளலாம்.
ட்வீட் மறைவது குறித்து வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக புகாரளித்து வந்தனர். இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் ட்விட்டர் நிறுவனம் அந்தப் புகாரை ஒப்புக்கொண்டு, அதனை சரி செய்வதற்கான முயற்சியில் உள்ளதாக தெரிவித்திருந்தது. தற்போது, அப்பிரச்சினை சரிசெய்யப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த புதிய அப்டேட் மூலம், புதிய ட்வீட்கள் எப்போது திரையில் தோன்ற வேண்டும் என்பதை இனி பயனர்கள் முடிவு செய்வார்கள். அதற்கு, டைம்லைனுக்கு மேலே உள்ள tweet counter bar கிளிக் செய்தால் போதும், புதிய ட்வீட்கள் புதுப்பிக்கப்படும்.
auto-cropping வசதி நீக்கம்
அண்மையில், ட்விட்டர் நிறுவனம் auto-cropping வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களிலிருந்து நீக்கியது. இதன் மூலம், பயனர்கள் படம் கிராப் செய்யப்படாமல் முழுமையாக டைம்லைனிலே காணலாம். இந்த வசதி மொபைல் வெர்ஷனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் Warning Label வசதி
இது தவிர, பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ட்விட்டர் பல அம்சங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, அடுத்ததாக, தவறான ட்வீட்கள் அல்லது தவறான பாதைக்குக் கொண்டு செல்வது உள்ளிடவை குறித்து எச்சரிக்கும் வகையில் warning labels வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த warning label அம்சமானது, 2020அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு தயாரிக்கும் முயற்சியில் ட்விட்டர் களமிறங்கியது. ஏனென்றால், அப்போது ட்விட்டர் செயலி பொதுமக்களை தவறான பாதைக்கு அழைத்து செல்ல பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
பொய்யான கருத்துகளை தடுக்க ட்விட்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. எனவே, இந்த திட்டம் தான் பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்க ட்விட்டர் முடிவு செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil