Twitter testing new features Tamil News : ட்விட்டர் சில புதிய அம்சங்களை உருவாக்கி வருகிறது. மேலும், வரும் வாரங்களில் அவற்றை வெளியிடத் திட்டமிட்டும் உள்ளது. இந்தப் புதிய அம்சங்கள் படங்கள் அல்லது வீடியோக்களைக் அதன் பிளாட்ஃபார்மில் எவ்வாறு பகிரலாம் மற்றும் பார்க்கலாம் என்பதை மேம்படுத்தும் என்று நிறுவனம் ஒரு போஸ்ட்டில் தெரிவித்துள்ளது. பயனர்கள் விரைவில் 4கே படங்களைப் பதிவேற்றலாம் மற்றும் அதனைப் பார்க்கவும் முடியும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.
உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களைப் பதிவேற்றும் மற்றும் பார்க்கும் வசதி ஆண்டிராய்டு மற்றும் iOS பயனர்களுக்குக் கிடைக்கும். இந்த விருப்பம் உங்களுக்குத் தெரிந்தால், அதை உடனே சோதித்துப் பார்க்கலாம். பயனர்கள் ‘உயர்தர படங்கள்’ விருப்பங்களைப் புதுப்பிக்க விரும்பினால், அமைப்புகள் பிரிவில் அவை காணப்படுகின்றன. ‘அமைப்புகள் & தனியுரிமை’> ‘தரவு பயன்பாடு’-ஐப் பார்வையிடவும்.
வைஃபை அல்லது மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தி உயர்தர படப் பதிவேற்றத்திற்கான அமைப்புகள் இயல்பாகவே ‘ஒருபோதும் வேண்டாம்’ என அமைக்கப்பட்டிருக்கும். நீங்கள் ட்விட்டரில் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களைப் பதிவேற்ற விரும்பினால் அதைக் கைமுறையாக மாற்ற வேண்டும். வரவிருக்கும் புதுப்பிப்பு நீங்கள் படங்களைப் பார்க்கும் முறையையும் மாற்றும்.
“நீங்கள் ஒரு படத்தை ட்வீட் செய்யும்போது, ட்வீட் செய்பவரின் பக்கத்தில் படம் எவ்வாறு தோன்றும் என்பது காலவரிசையில் இருக்கும் என்று ட்விட்டர் கூறுகிறது. நிலையான விகித அளவுடன் ஒரே ஒரு படத்தைக் கொண்ட ட்வீட்டுகள், ட்விட்டரில் பதிவேற்றப்பட்ட விதத்தில் தோன்றும் என்றும், தளம் அதை கிராப் செய்யாது என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியது.
“ஆனால், காலவரிசையில் மற்ற பட அளவுகளை எவ்வாறு வடிவமைப்பது என்பதை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்” என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது. இந்த அம்சங்களைத் தவிர, மைக்ரோ-பிளாக்கிங் தளமும் செயல்படுகிறது. இது பயனர்கள், அனுப்பும் பட்டனை அழுத்திய பின்னரும் ஒரு ட்வீட்டை போஸ்ட் செய்வதை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்கும். நிறுவனம் விரைவில் செயல்தவிர் (undo) பட்டனை அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு ட்வீட்டை போஸ்ட் செய்வதற்கு முன்பு அதைத் திரும்பப் பெறவோ அல்லது திருத்தவோ அனுமதிக்கும்.
இந்த அம்சம் சமீபத்தில் ஜேன் மஞ்சுன் வோங் என்பவரால் வெளியிடப்பட்டது. அவர் சமூக நெட்வொர்க்குகளின் புதிய அம்சங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே கண்டுபிடிப்பவர். நீங்கள் ‘ட்வீட்’ பட்டனை அழுத்தினால் ட்விட்டர் நீல “செயல் தவிர்” ஆப்ஷனை காண்பிக்கும் என்று வோங் ட்விட்டரில் ஒரு GIF-ஐ வெளியிட்டார். “உங்கள் ட்வீட் அனுப்பப்பட்டது” என்ற சொற்களுக்குக் கீழே இந்த விருப்பம் தோன்றும். போஸ்டிங் படி, இது தீர்மானிக்க சில வினாடிகள் உங்களுக்கு வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“