Advertisment

'ட்விட்டர் காலப்போக்கில் அழிந்து போகலாம்' : முன்னாள் இந்திய தலைவர் மணீஷ் மகேஸ்வரி

ட்விட்டர் இந்தியா முன்னாள் தலைவர் மணீஷ் மகேஸ்வரி எலான் மஸ்க்கின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் சமூக ஊடக தளத்திற்கு என்ன தேவை என்பது குறித்து பேசினார்.

author-image
WebDesk
New Update
'ட்விட்டர் காலப்போக்கில் அழிந்து போகலாம்' : முன்னாள் இந்திய தலைவர் மணீஷ் மகேஸ்வரி

உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதிகாரிகள், ஊழியர்கள் பணி நீக்கம், ‘ப்ளூ டிக்’ வசதிக்கு சந்தா எனப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இது உலக முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில், எலான் மஸ்க்கின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து ட்விட்டரின் இந்தியா பிரிவு முன்னாள் தலைவர் மணீஷ் மகேஸ்வரியிடம் கேட்கப்பட்டது. ட்விட்டர் இறக்கப் போகிறதா? எலான் மஸ்க் என்ன செய்கிறார்? ட்விட்டரின் எதிர்காலம்? உள்ளிட்டவைகள் குறித்து 3 ஆண்டுகள் இந்தியா பிரிவு தலைவராக இருந்த மணீஷிடம் கேள்விகளை முன்வைத்தோம்.

கேள்வி: ட்விட்டர் நடவடிக்கைகள் பற்றி உங்கள் பார்வை? ட்விட்டர் இறந்துவிட்டதா?

மனிஷ் மகேஸ்வரி பதில்: கடந்த வாரம், எலான் மஸ்க் ஊழியர்களுக்கு ஒரு இ-மெயில் அனுப்பினார். அதில், அவர்கள் கடினமான பணி கலாச்சாரத்திற்கு உறுதியளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என உள்ளது. இதில் பல ஊழியர்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்தனர். இப்போது இது மிகவும் சிக்கலாக உள்ளது. இதனால் ட்விட்டரில் குழப்பமும், பரபரப்பும் நிலவுகிறது. ட்விட்டரின் முடிவு நெருங்கிவிட்டதாக பல பிரபலங்கள் அச்சத்தில் உள்ளனர். அதனால் பிரபலங்கள் சிலர் தங்களை இன்ஸ்டாகிராம் அல்லது Mastodon பின்தொடருமாறு கூறுகின்றனர். இது எதிர்மறை நெட்வொர்க் விளைவுக்கு வழிவகுக்கிறது.

ட்விட்டர் ஒரு பெரிய பிராண்ட். எனவே, அது உடனடியாக அழியாது. ஆனால் காலப்போக்கில் அழிந்து போகலாம். எலான் விஷயங்களைக் கண்டுபிடித்து சிக்கல்களை உணர வேண்டும்.
பின்னர் ட்விட்டரை மீட்டெடுக்க ஒரு திடமான குழுவை ஒன்றிணைக்க வேண்டும். இதை அவர் செய்யத் தவறினால், அழிவின் பாதைக்கு கொண்டு செல்லலாம்.

கேள்வி: மஸ்க் ட்விட்டரை அதிகப் பணம் கொடுத்து வாங்கியுள்ளார், அது பற்றி?

பதில்: நான் ஆச்சரியப்படுகிறேன். இவ்வளவு தொகைக்கு வாங்கியுள்ளீர்கள் என்றால் ஏன்
பகுத்தறிவற்ற முறையில் செயல்படுகிறீர்கள். ஆனால் ட்விட்டர் வாங்கியதற்கு பின்னால் ஒரு பெரிய நோக்கம் இருப்பதாக நான் நம்புகிறேன். இது முற்றிலும் வியாபாரம் நோக்கம் அல்ல. ஏனென்றால், அவ்வாறு இருந்தால், விளம்பரதாரர்கள் மற்றும் வருமானத்தின் நலன்களுக்காக அவர் செயல்பட்டிருப்பார். அரசியல் செல்வாக்கு மற்றும் தனது நோக்கத்தை ஆதரிப்பதற்கான ஒரு கருவியாகக் கொண்ட தனது வர்த்தக சாராத நிகழ்ச்சி நிரலை தொடர விரும்புகிறார் என்பதை நான் உணர்கிறேன். அப்போதும், அவர் நடந்து கொள்ளும் விதம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரது நடவடிக்கைகள் பகுத்தறிவுக்கு முரணானவை. இது எப்படி நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கேள்வி: அரசியல்? அவரது ட்வீட் விளையாட்டில் பெரிய குறிக்கோள் இருப்பதாக தெரிகிறதே?

மனிஷ் மகேஸ்வரி: குடியரசுக் கட்சியினரை ஆதரிப்பதன் மூலம் அவர் தனது அரசியல் விருப்பத்தைப் பற்றி மிகவும் குரல் கொடுத்து வருகிறார். தனிப்பட்ட அரசியல் கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதில் தவறில்லை. இப்போது பிரச்சனை என்னவென்றால், அவருடைய தனிப்பட்ட மற்றும் ட்விட்டரின் பார்வைகள் ஒன்றிணைகின்றன. ஏனெனில் இப்போது அவர் மட்டுமே உரிமையாளர். அப்படியானால், ட்விட்டர் நடுநிலையா அல்லது குடியரசுக் கட்சி ஆதரவா என்பதுதான் கேள்வி. இரண்டாவதாக, அவர் ஏற்கனவே 50 வயதை கடந்துவிட்டார். ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தில் வணிக ரீதியாக நல்ல வெற்றிகளைப் பெற்றுள்ளார். எனவே, அவருக்கு அடுத்தது என்ன? உலகப் பெரும் பணக்காரர். எனவே, நீங்கள் அடுத்து என்ன செய்வீர்கள்? அரசியல் ரீதியாக மிகவும் செல்வாக்கு மிக்க நபராக மாற விரும்பலாம்.

ட்விட்டர் இப்போது வர்த்தகம் மட்டுமல்ல. இது ஒன்றை சொல்கிறது. இது ஒரு குறிக்கோளை நிலைநிறுத்துகிறது. அரசியல் செல்வாக்கு பற்றியது.

கேள்வி: மஸ்க்கின் பல நடவடிக்கைகள் ட்விட்டருக்கு எதிரானது. இது எவ்வாறு பாதிக்கும்?

மனிஷ் மகேஸ்வரி: ட்விட்டர் முன் இருந்தது போல் நிச்சயமாக இருக்காது. கலாச்சாரம் மற்றும் தயாரிப்பு அடிப்படையில் இருக்காது. ‘ப்ளூ டிக்’ வசதிக்கு 8 டாலர் சந்தா தற்போது நிறுத்தப்பட்டுள்ளது, அது மீண்டும் தொடங்கும் என நினைக்கிறேன்.

ட்விட்டர் இரண்டு பக்க தளம். ஒருபுறம், தகவல்களை உருவாக்குபவர்கள் உள்ளனர். இவர்கள் தங்களைப் பற்றிய தகவல், கருத்து, செய்திகளை பகிர்ந்து கொள்ளும் சமூகப் புகழ்பெற்ற ஆளுமைகள். மேலும், அவர்கள் உருவாக்கும் தகவல்களின் தரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த நபர்கள் சிறந்தவர்கள், உண்மையானவர்கள் மற்றும் பின்பற்றப்படுவதற்கு தகுதியானவர்கள் என்பதைக் குறிக்க இந்தச் சரிபார்ப்பு ப்ளூ டிக் வழங்கப்பட்டது.
நெட்வொர்க்கின் மறுபுறம், இந்த புகழ்பெற்ற ஆளுமைகளைப் பின்தொடர்வதன் மூலம் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க விரும்பும் நபர்கள் உள்ளனர்.

எனவே, ட்விட்டர் ஒரு தளமாக இரு தரப்புகளையும் ஒன்றிணைத்து நெட்வொர்க் விளைவைப் பெறுகிறது. மேலும் இந்த ஃப்ளைவீல் விளைவு சிறப்பாகவும் வருகிறது. பிளாட்ஃபார்மில் அதிகமான படைப்பாளிகள் அதிக நுகர்வோரை ஈர்க்கிறார்கள்.

நீங்கள் எல்லாவற்றையும் சமன் செய்தால், கன்டன்ட் கிரியேட்டர்கள் இந்த தளத்தில் இருப்பதற்கான ஆதரவை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்தியாவில் உள்ள டிக்டாக், இன்ஸ்டாகிராம், மேஸ்டோடான் உடன் ஒப்பிடும் போது கருத்தில் கொள்ள வேண்டும்.

கேள்வி: ட்விட்டருக்கு ப்ளூ டிக் பயனர்கள் தேவைப்படுகிறதா?

மனிஷ் மகேஸ்வரி: முக்கிய நபர்கள் இருந்தால் மட்டுமே இந்த நெட்வொர்க் மதிப்புமிக்கதாக இருக்கும். பிரதமர் மோடி ட்வீட் செய்யவில்லை என்றால், அரசியலைப் பின்பற்றுபவர்கள் ஏன் ட்விட்டரில் இருக்க வேண்டும்? விராட் கோலி இல்லை என்றால், கிரிக்கெட் பிரியர்கள் ஏன் இங்கு இருப்பார்கள்?. முக்கியமான ஆளுமைகள் தேவைப்படுவது மட்டுமல்லாமல், தகவல்களை தீவிரமாக உருவாக்குவதும் அவசியம். ட்விட்டர் தளத்தை ஈர்ப்புடன் வைத்திருக்க, தொடர்ந்து ட்வீட் செய்வதற்கான காரணங்களை நீங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, அவர்கள் முக்கிய ஊடகங்களுக்குச் செல்வதற்கு முன், ட்விட்டரில் ட்வீட் செய்து தகவலைப் பகிர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். எனவே, ட்விட்டருக்கு உங்கள் தேவை அவசியம்.

ட்விட்டர் இன்று ஒரு பெரிய பயனர் தளத்தைக் கொண்டுள்ளது. உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு பயனர் தளம் தேவை மற்றும் விநியோகத்திற்காக வந்து பணம் செலுத்துவார்கள். ஆனால் பயனர்கள் தளத்தை விட்டு வெளியேறத் தொடங்கினால் அது வேறுபட்டதாக இருக்கும்.

கேள்வி: இந்த மோதலிலும் ட்விட்டரின் முக்கியத்துவம்?

மனிஷ் மகேஸ்வரி: ஒருபுறம், எலான் வெற்றிபெற வேண்டும், ட்விட்டர் வளர வேண்டும், ஏனெனில் பலர் ட்விட்டரைச் சார்ந்துள்ளனர். தகவல் மற்றும் செய்தி ஊடகங்கள் இல்லாத நாடுகளில், மக்கள் பலர் தகவல்கள், செய்திகளுக்கு ட்விட்டரைச் சார்ந்துள்ளனர். உலகில் என்ன நடக்கிறது என அறிய ட்விட்டர் பயன்படுத்துகின்றனர். இயற்கை பேரிடரின் போது மீட்பு மற்றும் நிவாரணத்திற்கான ஹெல்ப்லைனாக (உதவி மையமாக) சேவை செய்வதன் மூலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் கோவிட் இரண்டாவது அலையின் போது, ​​மக்கள் ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவமனை படுக்கைகளைத் தேட ட்விட்டரை நாடினர். அரசியல் மற்றும் வியாபார அம்சங்களை நீக்கினால், ட்விட்டர் இன்னும் ஒரு மிகக்பெரிய பொது சேவை தளமாக நன்மதிப்பை கொண்டுள்ளது. அது தான் எனக்கு தெரியும் வெள்ளிக் கோடு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Twitter Elon Musk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment