200 மில்லியன் ட்விட்டர் பயனர்களிள் தகவல்கள் லீக்... பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
200 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில் கணக்குகளை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து பார்ப்போம்.
ட்விட்டர் நிறுவனம் தொடர் சிக்கல்களைத் சந்தித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது ஹேக்கிங் பிரச்சனையில் சிக்கி உள்ளது. 200 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் பயனர் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட பல தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. பயனர்களின் பெயர், இமெயில், யூசர் பெயர், பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஆகிய தகவல்கள் கசிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Advertisment
சைபர் உளவுத்துறை நிறுவனமான CloudSEK இன் கூற்றுப்படி, ஃபிஷிங் முயற்சியில் ஈடுபட்டு பயனர்களின் அடையாளங்களை அம்பலப்படுத்த இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறுகின்றனர். ட்விட்டர் சமூக வலைதளத்தை பலரும் பயன்படுத்துகின்றனர். பல்வேறு நாட்டு தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் பயன்படுத்துகின்றனர். அதனால் இந்த தகவல் கசிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் தகவல்கள் சைபர் கிரைம் ஃபோரம் தளத்தில் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி வெளியானது. Ryushi என்ற பயனர் பெயருடன் 200,000 டாலர்களுக்கு தகவல்கள் விற்பனை என விளம்பரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சைபர் கிரைம் நிபுணர்கள் ட்விட்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து கூறுகின்றனர்.
பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
பொதுவாகவே சமூக வலைதளங்கள் போன்ற பொது தளத்தில் தகவல்கள் பகிர்வதில் கவனமாக இருப்பது அவசியம். இதைப் பயன்படுத்தி மோசடிகள் நடப்பது குறித்து நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் கணக்குகள் உருவாக்கி பயன்படுத்தும்போது எப்போதும் உங்களைப் பற்றி குறைந்த தகவல்களை கொடுக்க வேண்டும். அது இதுபோன்ற நிகழ்வுகளில் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என CloudSEK அறிவுறுத்துகிறது.