ஆதார் அட்டை இந்தியாவில் மிக முக்கிய அடையாள அட்டையாகும். 12 இலக்க எண்கள் கொண்ட ஆதாரில் உங்களின் பெயர், பிறந்த தேதி, நீங்கள் வசதிக்கும் முகவரி, கைரேகை, கருவிழி பதிவு என அனைத்தும் கொண்டிருக்கும். ஆதார் பல்வேறு துறைகளுக்கு அடையாள அட்டையாகப் பயன்படுத்தப்படுகிறது. வங்கி கணக்கு தொடங்குவது முதல் சிம் கார்டு வாங்குவது வரை பல்வேறு துறைகளுக்கு அடையாள அட்டையாகப் பயன்படுத்தப்படுகிறது.
எனினும் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில், ஆதார் மையம் சென்று உரிய ஆவணங்கள் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். இந்த நிலையில் குறிப்பிட்ட 2 விவரங்கள் அடிக்கடி மாற்ற முடியாது. அது பிற சிக்கல்களை எழுப்பும்.
உங்கள் பெயர், பிறந்த தேதியை அடிக்கடி மாற்ற முடியாது. ஒரு முறை ஆதார் பதிவு செய்யும் போதே பெயரின் எழுத்துகள், initials என அனைத்தையும் சரியாக குறிப்பிட வேண்டும். initials வர வேண்டிய இடமும் சரியாக கொடுக்க வேண்டும். இதே பெயர் மற்ற அரசு ஆவணங்களிலும் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
மற்றொன்று பிறந்த தேதி. ஆதாரில் பிறந்த தேதி தவறாக இருந்தால், அதை கட்டாயம் பிற ஆவணங்களுடன் குறிப்பிட்டு உடனடியாக மாற்றிக் கொள்ளவும். குழந்தையை பள்ளியில் சேர்த்த பிறகு, பெற்றோர்கள் அதை மாற்றியமைக்கும் பல்வேறு நிகழ்வுகள் உள்ளன. அடுத்து பொது தேர்வு, போட்டித் தேர்வின் போது சிலர்
இதை மாற்ற வேண்டும் எனக் கூறுவர். தெரிந்து கொள்ளுங்கள் இந்த விவரத்தையும் நாம் அடிக்கடி மாற்ற முடியாது. எனவே முதலில் பதிவு செய்யும் போதே சரியான தகவல்களை கொடுத்து சிரமத்தை தவிர்க்கவும். ஆதாரில் பெயர், பிறந்த தேதி மாற்றுவது மற்ற விவரங்கள் மாற்றுவதை விட சற்று கடினமான வேலையாகும். ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் எப்போதும் சரியானதாகவும், சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட விவரங்களாகவும் இருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“