அக்டோபர் மாதம் வானில் 2 கிரகணங்கள் நிகழ உள்ளன. சூரியன் மற்றும் சந்திர கிரகணம் இரண்டும் தோன்றவிருக்கிறது. அக்டோபர் 14-ம் தேதி நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. இது பெரும்பாலும் அமெரிக்க நகரங்களில் தான் தெரியும். இந்த வகையான கிரகணம் நிலவு பூமியிலிருந்து வழக்கத்தை விட சற்று தொலைவில் இருக்கும் போது நிகழ்கிறது. முழுமையான சூரியனை மறைக்காது. அதற்கு பதிலாக ஒரு மெல்லிய "நெருப்பு வளையம்" போல் தெரியும். இந்தியாவில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியாது.
அடுத்த வளைய கிரகணம் அக்டோபர் 2, 2024 அன்று நிகழும். அப்போது பசிபிக் பெருங்கடல் மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் இருந்து நெருப்பு வளையம் தெரியும்.
பகுதி சந்திர கிரகணம்
இந்தப் பகுதி சந்திர கிரகணம் அக்டோபர் 28 அன்று நிகழ உள்ளது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, அண்டார்டிகா மற்றும் ஓசியானியா உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்கிறது. இந்த பகுதியில் உள்ள நாடுகளில் பகுதி சந்திர கிரகணம் தெரியும். பகுதி சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் பூமியின் நிழலைக் கடந்து செல்லும் நிகழும். அப்போது நிலவு வழக்கத்தை விட குறைவான பிரகாசமாகத் தோன்றும். பகுதி சந்திர கிரகணம் அமெரிக்க நேரப்படி மாலை 3:36 மணிக்கு தொடங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“